“முதலில் பிரேக்கப் ஆகிடுச்சான்னு உறுதிப்படுத்திக்கோங்க” – நடிகை ரம்யாவின் காதல் தோல்விக்கான தீர்வு

Actress Ramya Ramakrishnan Relationship Counselor முக்கியமாக யாரையும் இம்ப்ரெஸ் பண்ண முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

Actress Ramya Ramakrishnan Relationship Counselor Tamil News
Actress Ramya Ramakrishnan Relationship Counselor Tamil News

Actress Ramya Ramakrishnan Relationship Counselor Love Breakup : நடிகை, ஆராய்ச்சி அறிஞர், மனநல ஆலோசகர் என பன்முகத் திறமையாளர் ரம்யா ராமகிருஷ்ணன். ரிலேஷன்ஷிப் கவுன்சிலராக இருக்கும் ரம்யா சமீபத்தில் பிரேக்கப்பை தொடர்ந்து மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்க்கான தீர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அதுமட்டுமின்றி தான் பின்பற்றும் டயட் முதல் சரும பாதுகாப்பு டிப்ஸ்கள் வரை பலவற்றையும் பகிர்ந்துகொண்டார்.

பளபளக்கும் சருமத்திற்கு ரம்யா உட்கொள்வது பீட்ருட் ஜூஸ். அதன் மீதமிருக்கும் சக்கைகளோடு கடலை மாவு உள்ளிட்டவற்றை கலந்து முகத்திற்கும் அப்ளை செய்வாராம். அதேபோல, அவருடைய டயட் பிளானும் மிகவும் சிம்பிள்தான். பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடுவார். ஆனால், உட்கொள்ளும் அளவில் மட்டும் அதிக கவனம் செலுத்துவாராம். கீரை, பருப்பு வகைகள் மற்றும் சிறிது நேரம் சூரிய ஒளியை உள்வாங்கிக்கொள்வது போன்றவற்றைப் பின்பற்றும் பழக்கம் இவருக்கு உண்டு.

அடுத்ததாக உறவுகளில் ப்ரேக்கப்பை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கு நீண்ட விளக்கமளித்தார். “இந்தக் காலகட்டத்தில் நாம் உண்மையில் காதலிக்கிறோமா அல்லது உண்மையில் நமக்குக் காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்வதிலேயே பெரிய சிக்கல்களை உள்ளன. அதனால், முதலில் இது காதல்தானா அல்லது உண்மையில் பிரேக்கப் ஆகிவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அழ வேண்டும் என்று நினைத்தால், அழுது தீர்த்துவிடுங்கள். அதற்குப் பிறகு நம் வாழ்க்கைக்கு எது அவசியம், எது அவசியமற்றது என்பதில் தெளிவாக இருங்கள். ஏனென்றால், எப்போதுமே நமக்கு ஒன்றைவிட இன்னொன்று பெட்டர் ஆப்ஷனாகதான் தோன்றும். அதனால், மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. தெளிவான முடிவும் சிந்தனையும் அவசியம்.

இவை எல்லாவற்றையும்விட அவசியம், நண்பர்களின் தேர்வு. தனிமையில் இருப்பதைத் தவிருங்கள். யாராவது ஒரு நண்பரிடமாவது உங்கள் மனதில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும், சந்தோஷங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பரையாவது நம்மோடு வைத்திருப்பது மனநலத்திற்கு நல்லது.

முக்கியமாக யாரையும் இம்ப்ரெஸ் பண்ண முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். இந்தக் காரணத்தைக்கொண்டும், உங்களை இழந்து நடிக்கக்கூடாது. அதேபோல செல்ஃப் லவ் என்பது முக்கியம். முதலில் உங்களை நீங்கள் விரும்புங்கள். ஏராளமான அன்பும் காதலும் உங்களுக்குள் இருந்தால், அதனை வெளியே தேடவேண்டிய அவசியமே இல்லை. உங்களிடமே காதல் இருந்துவிட்டால், அதை ஏன் வெளியே சம்பாதிக்கவேண்டும்? எனவே , எங்கேயும் காதலைத் தேடாமல், கொடுக்க மட்டுமே பழகிக்கொள்ளுங்கள்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress ramya ramakrishnan relationship counselor break up tamil news

Next Story
நோய் எதிர்ப்பு சக்தி… காலையில் முருங்கை ஜூஸ் எடுத்துக்கோங்க!Immune boosting drinks Tamil News: Moringa Drink Benefits Weight Loss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com