scorecardresearch

மின்னும் தோல்.. அழகான முகம்.. கட்டான உடல்.. ராஷ்மிகா-வின் பியூட்டி மற்றும் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்!

ஸ்லிம்மாக இருப்பதை விட ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது மிகவும் முக்கியம் என்று ராஷ்மிகா நம்புகிறார்.

மின்னும் தோல்.. அழகான முகம்.. கட்டான உடல்.. ராஷ்மிகா-வின் பியூட்டி மற்றும் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்!
Actress rashmika mandanna beauty secret and fitness routine

இந்தியாவின் தேசிய க்ரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா’ தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஷ்மிகாவின் நடிப்பு மட்டுமல்ல. அவரது அழகும், கியூட்னஸூம் கூட ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதோடு சோஷியல் மீடியாவில் ராஷ்மிகா பகிரும் ஃபிட்னெஸ் படங்கள், பலருக்கு உத்வேகம் அளிக்கிறது. இன்று ராஷ்மிகாவின் உடற்பயிற்சி முறையை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்!

வொர்க்-அவுட் வழக்கம்

ஸ்லிம்மாக இருப்பதை விட ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது மிகவும் முக்கியம் என்று ராஷ்மிகா நம்புகிறார். எப்போதும் தனது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ராஷ்மிகா, வாரத்திற்கு நான்கு முறை ஒர்க் அவுட் செய்வது, கிக் பாக்ஸிங், ஸ்கிப்பிங், நடனம், நீச்சல், ஸ்பின்னிங், யோகா மற்றும் சுறுசுறுப்பான நடை போன்ற ஃபிட்னெஸ் வழக்கத்தை தவறாமல் கடைபிடிக்கிறார்.

கார்டியோவிற்கான இந்த நடவடிக்கைகள் தவிர, அவர் தசையை வளர்ப்பதற்கான எடை பயிற்சியையும் செய்கிறார்.

கார்டியோ வாஸ்குலர் பயிற்சிகள் மற்றும் எடைப் பயிற்சி ஆகியவை ராஷ்மிகாவின், வொர்க் அவுட் வழக்கத்தை முழுமையாக்குகிறது.

ராஷ்மிகா மந்தனா

ஃபுல் பாடி ஃபோம் ரோல் (Full body foam roll) மற்றும் ஸ்ட்ரெட்ச் போன்ற வார்ம் அப் பயிற்சிகளுடன் ராஷ்மிகாவின் வொர்க்அவுட் வழக்கம் தொடங்குகிறது. 2-3 நிமிடங்கள் வரை இந்தப் பயிற்சிகளைச் செய்த பிறகு, ஹிப் த்ரஸ்ட் (hip thrusts), ஹாஃப் நீலிங் பேண்ட் ரோஸ் (half kneeling band rows), மெடிசின் பால் ஸ்லம் (medicine ball slam) போன்ற பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த பயிற்சிகள் அனைத்தையும் அவர் ஒவ்வொரு நாளும் செய்வதில்லை, ஆனால்  ஒரு சீரான வேலையை உறுதி செய்வதற்காக, அனைத்து பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்கிறார்.

மேலும் ராஷ்மிகா தனது ஃபிட்னெஸ் வழகத்தில், லேண்ட்மைன் டெட்லிஃப்ட் (landmine deadlift), பெஞ்ச் புஷ்-அப் (bench push-up), ஐசோமெட்ரிக் புஷ் அப்(isometric push-up) போன்ற  மல்டி ஜாயிண்ட் ப்ரைமரி எக்ஸர்ஸையும் சேர்த்துக் கொள்கிறார்.

ஒவ்வொன்றிலும் எட்டு முதல் பத்து முறை என மீண்டும் மூன்று செட்கள் செய்யப்படுகின்றன.

டம்பல்ஸுடன் கூடிய உடல் பயிற்சியில் ஸ்னாட்ச் (snatch), புஷ் பிரஸ் (push press), அப்ரைட் ரோ மற்றும் பெண்ட் ஓவர் ரோ (upright row, and bent over row) போன்ற பயிற்சிகள் ஒவ்வொன்றும் ஆறு முறை மீண்டும் செய்யப்படுகின்றன. மேலும் ராஷ்மிகா, தனது வொர்க் அவுட் வழக்கத்தில் சின் அப் (chin up exercises) பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்கிறார்.

ராஷ்மிகா மந்தனா

உணவு முறை

ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் சைவ உணவுக்கு மாறினார். தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், ராஷ்மிகா தனது நாளைத் தொடங்குகிறார், அவளுடைய உணவியல் நிபுணர் அறிவுறுத்தியதை அடுத்து, இப்போது ஆப்பிள் சைடர் வினிகருக்கு மாறிவிட்டார்.  தன்னை நீரேற்றமாக வைத்திருப்பதையும், நிறைய தண்ணீர் குடிப்பதையும் எப்போதும் உறுதிசெய்கிறார். மதிய உணவிற்கு தென்னிந்திய உணவு வகைகளை விரும்புகிறார் ஆனால் அரிசியை தவிர்க்கிறார். அதேபோல, ராஷ்மிகா இரவு உணவிற்கு காய்கறி சூப் அல்லது பச்சை பழங்களை சாப்பிட விரும்புகிறார்.

அழகான தோலின் ரகசியம்

ராஷ்மிகா தனது தோல், முடி மற்றும் அழகை பராமரிக்கும் பொருட்டு, ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், கிளன்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் ஆகியவற்றை உள்ளடக்கிய தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுகிறார். தினசரி சன்ஸ்கீரின் பயன்படுத்துகிறார். ஆனாலும் ராஷ்மிகா முடிந்தவரை இயற்கையுடன் நெருக்கமாக இருக்கவே நினைக்கிறார். எனவே, முடி பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்புக்கு இயற்கை பொருட்களையே அவர் நம்புகிறார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Actress rashmika mandanna beauty secret and fitness routine