Advertisment

ஒதுக்கி வைத்த அம்மா... அரசுப் பள்ளியில் படிப்பு... 18 வயதில் திருமணம்..! ரேகா நாயர் ஃப்ளாஷ்பேக்

கோயம்புத்தூர்ல கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன். தமிழ்’ல டாக்டரேட் பண்ணிருக்கேன். மொத்தம் 13 டிகிரி படிச்சிருக்கேன்- ரேகா நாயர்

author-image
WebDesk
Sep 01, 2022 15:15 IST
New Update
actress rekha nair

actress rekha nair

ரேகா நாயர், பிரபல சீரியல் நடிகை, சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர், அரை நிர்வாணமாக நடித்து பெரும் விமர்சனத்துக்கு ஆளானார். மேலும் தன்னை விமர்சித்த பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் வைத்து தாக்கினார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

Advertisment

இந்நிலையில் சமீபத்தில் ரேகா நாயர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, தன் வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஷகிலாவிடம் பகிர்ந்து கொண்டார்.

நான் பிறந்தது கேரளா, கோயம்புத்தூர்ல கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன். தமிழ்’ல டாக்டரேட் பண்ணிருக்கேன். மொத்தம் 13 டிகிரி படிச்சிருக்கேன். எங்க அம்மா ரொம்ப கலர், எங்க அப்பா ரொம்ப கருப்பு. நான் கலர் கம்மியா இருக்கிறதால, அம்மா என்னைய சின்ன வயசுல இருந்தே நிராகரிச்சாங்க. மாமாங்க எல்லாம் என்னைய கருப்பி, கருங்குயிலு, காக்கானு தான்  கூப்பிடுவாங்க. அப்போதான் நாம ஏதாவது பண்ணனும் தோனுச்சு. ஊருல ஏதாவது போட்டி நடந்தா அதுல கலந்துகிட்டு, அண்டா, சொம்பு எல்லாம் பரிசா வாங்கிருக்கேன். 18 வயசுல கல்யாணம் முடிஞ்சது. வீட்டுலதான் பாத்து முடிச்சு வச்சாங்க. 20 வயசுல குழந்தை பிறந்தது இப்போ எனக்கு 38 வயசாகுது. என் பொண்ணு இப்போ பிளஸ் 2 படிக்கிறா.

ஆல் இந்தியா ரேடியோல இருந்துதான் என்னோட மீடியா பயணம் ஆரம்பமானது. அப்புறம் விஜய் டிவியில ஆண்டாள் அழகர் சீரியல் பண்ணேன். அதான் என்னோட முதல் சீரியல். அதுமூலமா சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் சீரியல்ல நடிச்சேன். கதகளி, போக்கிரி ராஜா, தெறி, இரவின் நிழல் படங்கள்ல நடிச்சிருக்கேன்.

இரவில் நிழல் படம் பத்தி என் கணவர் சொன்னது இதான். நீ யாருன்னு மறந்துரு. இந்த படத்துல நீ செத்துட்ட. செத்ததுக்கு அப்புறம் உனக்கு என்ன தெரியும். அதுதான் உன் கதாபாத்திரம்னு சொன்னாரு, இப்படி நடிக்கும் போது எனக்கு கூச்சமா இல்ல. அங்க படுக்கும்போது உண்மையா செத்துதான் இருந்தேன். 3 பேருதான் உள்ளே வந்தாங்க. ஷூட் முடிஞ்சதும், அந்த மூணு பேருமே என் கால் பிடிச்சு அழுதுட்டாங்க. உண்மையிலே அதுல அசிங்கம் தெரியாது. ஆனா, நம்ம மக்கள் சேலை விலகி இருந்தாலே தப்பாதானே பார்ப்பாங்க. இங்க கேரக்டரை பாக்க மாட்டுக்காங்க, அது பண்ணது யாருன்னு பாக்கிறாங்க. அதுதான் பிரச்னை.

மீ டு குறித்து பேசிய ரேகா, நீங்க கூப்பிட்டு, எனக்கு பிடிச்சா நான் வரப்போறேன். இல்லன்னா கிளம்பு சொல்லப்போறேன். நீங்க போயி படம் நடிச்சி, எல்லாம் பண்ணிட்டு, 10 வருஷம் கழிச்சு மீ டு சொன்னா, அப்போ அந்த 10 வருஷம் என்ன பண்ணீங்க. ஆம்பளைங்க பணம் கொடுக்கிறாங்க சொன்னா, பொம்பளைங்களும் என்ஜாய் பண்றாங்க.  என்னைய யாரும் இப்போவரைக்கும் அப்படி கூப்பிடல என பல விஷயங்களை ரேகா இந்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment