புடவைகள் இப்போது ஃபேஷன் உலகில் உலகளாவிய பிரதிநிதித்துவமாக மாறிவிட்டது. ஃபேப்ரிக், டிசைன்ஸ் மற்றும் பிளவுஸ் என புடவைகள் புதிய பரிணாமத்தைத் தொட்டுள்ளன…
Advertisment
அப்படித்தான் பாலிவுட் நடிகை ரேகா. அவரது ஸ்டைல் எப்போதும் தனித்துவமானது.
காஞ்சிவரம் புடவை, மல்லிக்கை பூ, நெற்றியில் குங்குமம். இதுதான் ரேகாவின் எவர்கிரீன் கிளாசிக் லுக். இன்று அவரது 69வது பிறந்தநாளில், ரேகாவின் பேஷன் லெகஸி மற்றும் அவரது ஸ்டைல்- இன்றும் பொருத்தமானதாக இருப்பதைப் பார்க்கிறோம்.
ஸ்கிரீன் விருது விழாவில் இயக்குனர் யாஷ் சோப்ரா மற்றும் நடிகை ரேகா. (Express archive photo)
Advertisment
Advertisements
ரேகாவின் ஸ்டைலில் மிகவும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், அது பல ஆண்டுகளாக அப்படியே தொடர்கிறது, என்கிறார் ஸ்டார் ஸ்டைலிஸ்ட் இஷா பன்சாலி..
ஸ்டைலிஸ்ட் ஷீஃபா கிலானி கூறுகையில், ரேகாவின் ஸ்ட்ராங்க் ரெட் லிப், கர்ள்ஸ் மற்றும் பனாரசி பட்டுப் புடவை லுக்கை நாம் எப்போதும் நம்பலாம்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த பிரபல ஸ்டைலிஸ்ட் ஏகா லக்கானியின் கூற்றுப்படி, இதுவே அவரை எவர்கிரீனாக ஈடுசெய்ய முடியாததாக ஆக்குகிறது..
1983 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற 9வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ரேகா மற்றும் சஷி கபூர். (Express archive photo)
ஆயிரம் ஸ்டைலிஸ்ட் மற்றும் இமேஜ் க்யூரேட்டர்ஸ் இல்லாமல், இந்த ஒப்பற்ற பேஷன் பாரம்பரியத்தை ரேகா எப்படி உருவாக்க முடிந்தது? நிச்சயமாக, அவரது அர்ப்பணிப்பு தான் காரணம்…
’நான் எப்போதும் ஒரு இந்திய இளவரசி போல வாழ்ந்தேன், யாருக்கும் அந்தரங்கம் என்று இல்லை. நான் உணர்ந்ததால் அப்படி வாழ்கிறேன். இது ஒரு மனநிலை மட்டுமல்ல, என் வாழ்க்கையின் நிலை’, என்று அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வோக் அரேபியாவிடம் கூறினார்.
ரேகா தனது காஞ்சிவரம் புடவைகள் தனது தாயின் நினைவுப் பரிசு என்று முன்பு பேட்டிகளில் கூறியிருக்கிறார். ‘நான் காஞ்சிவரம் புடவையை அணியும் போது, நான் அவளுடைய அன்பில் மூழ்கியிருப்பது போல் உணர்கிறேன்,’ என்று அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கூறினார்.
ரேகா மற்றும் நடிகர் தேவ் ஆனந்த் (Source: Express Archive)
என்ன உங்களுக்கும் பிடித்து இருக்கிறதா?
அடுத்தமுறை பார்ட்டி, ஃபங்ஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்டிப்பா நடிகை ரேகாவின் எவர்கிரீன் ஸ்டைலை நீங்களும் டிரை பண்ணுங்க…