'முகத்தில் பருக்கள் வந்தால் இதை மட்டும் பண்ணுவேன்'; நடிகை சாய் பல்லவி சொல்லும் சீக்ரெட் டிப்ஸ்!
முகத்தில் பருக்களை போக்குவதற்கு தான் பின்பற்றும் சிம்பிளான வழிமுறை குறித்து நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களையே அவர் பயன்படுத்துவதாக கூறுகிறார்.
முகத்தில் பருக்களை போக்குவதற்கு தான் பின்பற்றும் சிம்பிளான வழிமுறை குறித்து நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களையே அவர் பயன்படுத்துவதாக கூறுகிறார்.
வெள்ளித் திரையில் தோன்றும் சினிமா பிரபலங்களை பார்க்கும் போது சாமானிய மனிதர்களுக்கு எப்போதுமே பிரம்மிப்பும் ஆச்சரியமும் ஏற்படும். அவர்களது சருமம் மற்றும் முடி ஆகியவை பார்ப்பதற்கு அவ்வளவு வசீகரமாக இருக்கும்.
Advertisment
கோடிகளில் வருமானம் ஈட்டுவதால் தான் இது போன்ற சரும பராமரிப்பு சாத்தியம் ஆகும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கும். அதுவும் ஒரு வகையில் உண்மை தான். அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், சாப்பிடும் உணவுகள் ஆகியவற்றை எல்லோராலும் பெற முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எனினும், சில எளிமையான வழிமுறைகளை திரைப் பிரபலங்களும் பின்பற்றுவதாக கூறுகின்றனர். அவர்களை பார்க்கும் போது நம்மில் ஒருவரைப் போன்ற உணர்வு இருக்கும். அந்த வரிசையில் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சாய் பல்லவி.
அவரை திரையில் பார்த்தாலும் சரி, பொது நிகழ்வுகளில் பார்த்தாலும் சரி மிக இயல்பாகவும், எளிமையாகவும் காட்சியளிப்பார். இதன் காரணத்திற்காக அவரை ரசிப்பவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அதன்படி, நடிகை சாய் பல்லவி, தான் பின்பற்றக் கூடிய சில பியூட்டி டிப்ஸை குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, அதிக பணம் செலவு செய்து நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. சாதாரணமாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை செய்யலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
பல சமயத்தில் முகத்திற்கு மஞ்சள் மட்டுமே தான் பயன்படுத்துவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பருக்கள் உருவாவதை போன்று தோன்றினால் அந்த இடங்களில் கட்டாயமாக தான் மஞ்சள் பூசுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் முகத்தில் தயிர் மற்றும் தேன் ஆகியவற்றையும் தேவையான நேரங்களில் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற இயற்கையான பொருட்களுடன் இரசாயனங்களை சேர்க்காமல் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
மேலும், முடியை பராமரிப்பதற்காக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை இதற்கு உபயோகிக்கலாம். மேலும், முடியில் சிக்கு எடுக்கும் போது சீப்பை பயன்படுத்தாமல் கைகளால் சிக்கு எடுக்கலாம் என சாய் பல்லவி பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - JD stark Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.