'பிரேமம்' திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். சாய் பல்லவி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'கார்கி' என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பிற்கு தேசிய விருது வழங்கப்படாததால், சினிமா ஆர்வலர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
அண்மையில், இவர் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் சுமார் ரூ. 300 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்படி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் சாய் பல்லவி தனது ஸ்கின் கேர் மற்றும் ஹேர் கேர் டிப்ஸ் குறித்து தெரிவித்துள்ளார். இரசாயனங்கள் உள்ளிட்டவற்றை சேர்க்காமல் இயற்கையான பொருட்களை, தான் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான நேரங்களில் முகத்திற்கு மஞ்சள் மட்டுமே தான் பயன்படுத்துவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பருக்கள் உருவாவதை போன்று தோன்றினால் அந்த இடங்களில் கட்டாயமாக தான் மஞ்சள் பூசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் முகத்தில் தயிர் மற்றும் தேன் ஆகியவற்றையும் தேவையான நேரங்களில் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற இயற்கையான பொருட்களுடன் இரசாயனங்களை சேர்க்காமல் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
இதேபோல், முடியை பராமரிப்பதற்காக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை இதற்கு உபயோகிக்கலாம். மேலும், முடியில் சிக்கு எடுக்கும் போது சீப்பை பயன்படுத்தாமல் கைகளால் சிக்கு எடுக்கலாம் என சாய் பல்லவி பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.