ஆஹா.. நம்ம நித்யாவா இது? வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Actress Samantha Akkineni Latest Photos Costumes Tamil News ஹேர்ஸ்டைல் பொறுத்தவரையில், மேலே தூக்கிப்போடப்பட்ட பண் ஹேர்ஸ்டைல். அவ்வளவுதான்..

Actress Samantha Akkineni Latest Photos Costumes Tamil News
Actress Samantha Akkineni Latest Photos Costumes Tamil News

Actress Samantha Akkineni Latest Photos Costumes Tamil News : ‘எப்படி இருந்த சமந்தா இப்போ எப்படி ஆகிட்டாங்க?’ என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வேற லெவல் மாற்றத்தைக் கொடுத்திருக்கிறார். திரையுலகில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு குழந்தை, குடும்பமென பிஸியாக இருப்பார்கள். ஆனால், சமந்தா அப்படியே ஆப்போசிட். திருமணத்திற்கு பிறகுதான் அவருடைய லைஃப்ஸ்டைல் முழுவதும் அடுத்தகட்டத்துக்குச் சென்றிருக்கிறது.

கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதிலிருந்து, சரும பராமரிப்பு, தோட்டக்கலை, சொந்தமாக டிசைனர் பொட்டிக் என பல்வேறு விதமான விஷயங்களில் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல், நடிப்பு, போட்டோஷூட் உட்பட தன்னுடைய திரைத்துறையிலும் படுபிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

அதிலும், இப்பொழுதெல்லாம் அவருடைய உடை தேர்வு மிகவும் வித்தியாசமாகவும் நுட்பமாகவும் உள்ளது. லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகளை உடுத்தி, சோதனை செய்வதில் கொஞ்சமும் தயக்கம் காட்டுவதில்லை. ஒவ்வொரு முறையும் தன்னுடைய அசத்தலான காஸ்டியூம்களால் அனைவரையும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா அமைத்த வெள்ளை சீக்வின் லெஹெங்காவில் சமந்தா அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

உங்களுக்கு எளிமையான பார்ட்டி லுக் அல்லது ட்ரெண்டி வரவேற்பு நிகழ்வுக்கான தோற்றம் வேண்டுமென்றால், நிச்சயம் சமந்தாவின் இந்த லேட்டஸ்ட் தோற்றதை பின்பற்றலாம். கற்கள் பதித்த அழகிய ஸ்கர்ட் அதற்கு மேட்சாக வித்தியாச ஸ்லீவ்ஸ் கொண்ட அழகிய பிளவுஸ் என மிடுக்கான தோற்றத்தில் ஜொலிக்கிறார் சமந்தா.

இந்த அழகிய ஆடையை ஒரு ஜோடி ஸ்டேட்மென்ட் வைர காதணிகளுடன் அணிந்து பளீச் தோற்றத்தை பெற்றார். காலனியை கவனிக்காமல் இருக்க முடியுமா? வெளிர் வண்ண உடைக்கு ஏற்ற வகையில் சில்வர் நிற ஸ்டில்லெட்டோ அணிந்திருந்தார். இதற்கு அடர்ந்த மேக்-அப் ஏதுமில்லாமல், கண்களில் மை, பளபளக்கும் ஐ ஷேடோ, நன்கு வரையறுக்கப்பட்ட புருவங்கள், மஸ்காரா எனக் கண்களை ஹயிலைட் செய்து, கொஞ்சமாக பிளஷ் மற்றும் நியூட் ஷேடு லிஸ்ப்ஸ்டிக் தீட்டிருந்தார். ஹேர்ஸ்டைல் பொறுத்தவரையில், மேலே தூக்கிப்போடப்பட்ட பண் ஹேர்ஸ்டைல். அவ்வளவுதான்.. எளிமையான ஸ்டைலிஷ் பார்ட்டி லுக் நொடியில் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress samantha akkineni latest photos costumes tamil news

Next Story
கனா காணும் காலங்கள் முதல் நாம் இருவர் நமக்கு இருவர் வரை… மாயன் ஃபேவரைட் மாமியார்… தீபா நேத்ரன் பயோகிராபி!dhipa nethrun_
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com