தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில், நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு விவகாரத்து செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மேலும் ஒரு மகன் இருக்கிறான். தற்போது சீதா திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார்.
அதில் இவரது மாடித்தோட்ட வீடியோக்கள் மிக பிரபலம். முதலில் சில செடிகளை நடவு செய்த சீதா, மாடித்தோட்டம் குறித்து சில விஷயங்களை தெரிந்துகொண்ட பிறகு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, பீர்க்கங்காய், கேரட், பீன்ஸ் என முப்பதுக்கும் மேற்பட்ட காய்கறி, பழவகை மரங்களை வளர்த்திருக்கிறார். மேலும், பல வகையான கீரைகளும், பூச்செடிகளையும் வளர்க்கிறார். பூச்சிவிரட்டிகளை இவரே தயாரித்துப் பயன்படுத்துகிறார்.
இந்நிலையில் நடிகை சீதா இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அதிகாலையில், டீசர்ட், டிராக் பேண்ட் அணிந்து கொண்டு, சீதா வாக்கிங் போகிறார்.
இதுதான் சீதாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட் என பலரும் அந்த வீடியோவை பார்த்து புகழ்ந்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“