புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சீதா இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் மாடித் தோட்ட வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். ஒருமுறை சீதா, பிரபல தமிழ் இதழுக்கு அளித்த பேட்டியின் போது தனது குழந்தை பருவம், தனக்கு முதல் பட வாய்ப்பு எப்படி வந்தது போன்ற பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்…
‘என் பூர்வீகம், சென்னைதான். எப்போதும் எங்க வீட்டுல உறவினர்கள் எல்லாரும் சேர்த்து 25 பேர் இருப்பாங்க. அதுல நான் மட்டும் ஒரே பெண் குழந்தை. என்னை கஷ்டமே தெரியாம செல்லமா வளர்த்தாங்க. நான் ரொம்ப அமைதி, வெகுளியா இருப்பேன். யாராச்சும் அதட்டினாக்கூட அழுதுடுவேன்.
அப்பா மோகன் பாபு, தமிழ் சினிமாவுல கேரக்டர் ரோல்கள்ல நடிச்சிட்டு இருந்தார். வீட்டுல சினிமா பத்தி பேச மாட்டோம். சினிமா தியேட்டருக்கும் கூட்டிட்டுப்போக மாட்டாங்க. எனக்கு மசால் தோசை, ரோஸ் மில்க் பிடிக்கும். அதை சாப்பிட மட்டும் எப்பவாது வெளியே கூட்டிட்டுப்போவாங்க. நான் நல்லா படிப்பேன். டாக்டர் ஆகணும் ஆசைப்பட்டேன்.
வீடியோ கேசட்ல, ஏதோ ஒரு கல்யாண ஃபங்ஷன்ல நான் இருக்கிறதை பார்த்த இயக்குநர் பாண்டியராஜன் சார், என் அப்பா மூலமா என்னை நடிக்கக் கேட்டார்.
அப்போ நான் பத்தாவது படிச்சுட்டு இருந்தேன், எனக்கு நடிக்கிறதுல விருப்பமில்லை. என் அப்பாதான், வர்ற வாய்ப்பை ஏன் வேண்டாம்னு சொல்லணும்? இந்த ஒரு படத்துல மட்டும் நடி. பிறகு, உன் விருப்பம் சொன்னார்…
ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த பாண்டிய ராஜன் சார், நீ பயப்படாம நடிக்கலாம். உன்னை யாரும் தொட்டுப் பேச மாட்டாங்க. உனக்கு எந்தத் தொந்தரவும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார்…
வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருந்த என் அம்மாவும் ரொம்ப கட்டாயப்படுத்துனாங்க. பிறகுதான் நான் 'ஆண் பாவம்' படத்துல நடிக்க சம்மதிச்சேன்...
இப்படி பல நினைவுகளை நடிகை சீதா, அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“