/indian-express-tamil/media/media_files/2025/08/15/actress-shakila-home-tour-2025-08-15-11-43-14.jpg)
Actress Shakila home tour
சினிமா உலகின் சர்ச்சைகள், வதந்திகள், கிசுகிசுக்கள் என அனைத்தையும் கடந்து, தன்னுடைய வாழ்வில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷகீலா. அண்மையில் கலட்டா தமிழ் யூடியூப் சேனலில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடைய வீட்டைச் சுற்றிக் காட்டி, பல சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
சென்னை, தி. நகரில் ஒரு சிறிய தெருவில் அமைந்திருக்கும் ஷகிலாவின் வீடு, வெறும் செங்கல் மற்றும் சிமெண்ட்டால் ஆனது அல்ல. அது, கிட்டத்தட்ட 44 வருடங்களாக அவரது வாழ்க்கையின் சாட்சியாக நிற்கிறது. “நான் சினிமாவுக்கு வந்த புதுசுல இருந்து இங்க தான் இருக்கேன். இந்த வீடு தான் என்னோட உலகம். என்னோட சந்தோஷம், கஷ்டம், எல்லாமே இங்க தான் ” என அவர் சொல்லும் போது, அந்த வீட்டின் ஒவ்வொரு சுவரிலும் ஒரு கதை ஒட்டிக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது.
"கடந்த 44 வருஷமா நான் இங்கதான் இருக்கேன். இந்த வீட்டில்தான் நான் ஒரு சின்ன பொண்ணா என் வாழ்க்கைய ஆரம்பிச்சேன். என் சினிமா வாழ்க்கையில இங்கதான் எல்லாருமா சந்தோசமா இருந்தோம். என் வீட்டுக்குள்ள வராத நடிகர்களோ, இயக்குநர்களோ இருக்கவே முடியாது. அதெல்லாம் ஒரு காலம்... என் வீடு எப்பவுமே சிரிப்பு சத்தமும், நண்பர்கள் பேச்சாலயும் நிறைஞ்சிருக்கும்.
என் வாழ்க்கையில நிறைய ஏமாற்றங்கள், துரோகங்கள்... அது எல்லாத்தையும் கடந்து வந்திருக்கேன். நிறைய பணம் சம்பாதிச்சேன். குறிப்பா, மலையாள படத்துல நான் டாப்ல இருந்தப்போ, ஒரு நாளைக்கு அஞ்சுல இருந்து ஆறு லட்சம் வரை சம்பாதிச்சிருக்கேன். அப்போல்லாம் பேங்க்ல போய் போடுறதுக்குக்கூட நேரம் இருக்காது. அதனால, வீட்லயே பணத்தை வச்சிருப்பேன். ஒருகட்டத்துல அது முழுசா நிரம்பிடும்.
என் அப்பா இறந்ததுக்கு அப்புறம் தான் என் வாழ்க்கை ஒரு டிப்ரஷன்ல போச்சு. ட்ரிங்க்ஸ், பீர்னு ஆரம்பிச்சு, நிறைய குடிச்சு வெயிட் போட்டேன். வேலைக்கும் போக மாட்டேன். சம்பளத்தை பத்தி அப்பா தான் பேசுவார். பணத்தை பத்தி பேசறதுக்கும் அப்பா தான் இருக்கணும். ஆனா, அப்பா இல்லாதப்போ, யார்கிட்ட போய் பேசுறது? யாருமே கேட்கவும் மாட்டாங்க.
குடிப் பழக்கம்
குடிப் பழக்கம் பத்தி நான் ஓப்பனா பேச தயங்கினது இல்லை. இது ஒரு பெருமைன்னு நான் சொல்ல மாட்டேன். இது ஒரு கெட்ட பழக்கம் தான். என் வாழ்க்கையில் இது ஒரு பகுதி. என் அப்பாவும் நைட் எட்டு மணிக்கு மேல தான் ட்ரிங்க் பண்ணுவார். அதே மாதிரி தான் நானும். எட்டு மணிக்கு மேல தான் ட்ரிங்க்ஸ். பகல்ல ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டேன். குடிச்சு என் வாழ்க்கையை தொலைச்ச நிறைய பேர் இருக்காங்க. அதனால தான், நான் யாரையும் குடிக்கச் சொல்லி தூண்ட மாட்டேன்', என்று ஷகீலா ரொம்பவே உருக்கமாகப் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.