ஒரு பைசா செலவு கிடையாது; இந்த ஃபேஸ்பேக்கை யூஸ் பண்ணுங்க: நடிகை சாக்ஷியின் பியூட்டி சீக்ரெட்
சரும பராமரிப்பில் செலவே இல்லாமல் ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த ஃபேஸ்பேக்கை தானும் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
நம்மில் பலருக்கு சினிமா பிரபலங்கள், தங்கள் சரும பராமரிப்பில் பயன்படுத்தும் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அது போன்ற பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து காணப்படும். இதன் காரணமாகவே இத்தகைய பொருட்களை சாமானியர்கள் வாங்க முடிவதில்லை.
Advertisment
ஆனால், செலவே இல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய இரண்டு பொருட்களை பயன்படுத்தி அசத்தலான ஃபேஸ்பேக் எப்படி தயாரிப்பது என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஃபேஸ்பேக்கை தயாரிக்க இரசாயனங்கள் எதுவும் சேர்க்க வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
அரிசி வடித்த கஞ்சியை பயன்படுத்தும் பழக்கம் தற்போது நம்மிடையே கிடையாது. ஆனால், அந்த அரிசி வடித்த கஞ்சியை நம் சரும பராமரிப்பில் எப்படி பயன்படுத்தலாம் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை தான் பயன்படுத்த தொடங்கிய பின்னர் சருமத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, அரிசி வடித்த கஞ்சியை தனியாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கஞ்சி ஆறியதும் அதனை எடுத்து ஃப்ரிட்ஜில் சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது, கஞ்சி பார்ப்பதற்கு கெட்டியாக மாறி இருக்கும். இத்துடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவலாம் என நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதன் பின்னர், சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது நம் முகம் பொலிவாக மாறிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சரும பராமரிப்பு முறை கொரியா நாட்டவர் பின்பற்றுவது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Miss Wow Tamizhaa Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.