நடிகை ஷாலினிக்கு, வெங்கடேஷ் பட் செய்து கொடுத்த வாழைப்பழ தோசை மிகவும் பிடித்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறி உள்ளார். இதை நீங்களும் வீட்டில் ஈசியா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 3
துருவிய வெல்லம் – ½ கப்
ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
முந்திரி பருப்பு – 1 ஸ்பூன் நறுக்கியது
பேக்கிங் பவுடர்- ½
உப்பு
கோதுமை மாவு – 1 கப்
பால் – அரை கப்
நெய்
செய்முறை : வாழைப்பழத்தை சின்னதாக நறுக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும்., தொடர்ந்து இதில் வெல்லம், ஏலக்காய் பொடி, பேக்கிங் பவுடர், உப்பு, முந்திரி சேர்த்து கிளரவும். தொடர்ந்து, இதில் கோதுமை மாவை சேர்க்கவும். தொடர்ந்து பால் சேர்த்து கிளரவும். மாவு கெட்டியாக இருந்தால், அதிகமாக பால் சேர்த்து கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு இதை அப்படியே வைத்துவிடவும். தொடர்ந்து தோசைக் கல்லில் நெய் சேர்த்து சின்ன தோசைகளாக சுட்டு எடுக்கவும்.