பாசிப்பயிறு இருந்தால் போதும்; ஹோம்மேட் ஃபேஸ் வாஷ் ரெடி பண்ணலாம்: நடிகை ஷ்ருதிகா டிப்ஸ்
பாசிப்பயிறு கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் தயாரித்து பயன்படுத்தலாம் என்று நடிகை ஷ்ருதிகா தெரிவித்துள்ளார். இந்த ஹோம்மேட் ஃபேஸ் வாஷை தானும் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாசிப்பயிறு கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் தயாரித்து பயன்படுத்தலாம் என்று நடிகை ஷ்ருதிகா தெரிவித்துள்ளார். இந்த ஹோம்மேட் ஃபேஸ் வாஷை தானும் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சருமம் பார்ப்பதற்கு மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், ஒரே நாளில் இத்தகைய பொலிவான சருமம் கிடைத்து விடாது. இதனை பெறுவதற்கு சீரான சரும பராமரிப்பு முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
Advertisment
மேலும், சினிமா பிரபலங்கள் மற்றும் சீரியல் நடிகர்களை பார்க்கும் போது அவர்களது முகம் எப்போதும் பொலிவாக தோன்றுவதை போன்று இருக்கும். பார்ப்பதற்கு இளமையாக தெரிய வேண்டும் என்று அவர்கள் மேற்கொள்ளும் சில சரும பராமரிப்பு முறை மூலமாக அவ்வாறு இருக்கிறார்கள்.
இதற்காக விலை உயர்ந்த ஃபேஸ் க்ரீம், சீரம் போன்ற பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்கள் கொண்டு இதனை நம்மால் செய்ய முடியும்.
அந்த வகையில், தான் தொடர்ச்சியாக பின்பற்றும் ஒரு சரும பராமரிப்பு முறை குறித்து நடிகை ஷ்ருதிகா குறிப்பிட்டுள்ளார். இதனை ஃபாலோ செய்வதன் மூலம் தனக்கு முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இதற்காக ஒரே ஒரு பொருள் மட்டும் இருந்தால் போதும். அதன்படி, வீட்டில் ஒருக்கும் பாசிப்பயிறை பொடியாக அரைத்து வைத்தால் போதுமானதாக இருக்கும். இதனை இரண்டு ஸ்பூன் எடுத்து தேவையான அளவு தண்ணீரில் கலந்தால், இயற்கையான ஃபேஸ் வாஷ் தயாராகி விடும்.
இதை வைத்து முகத்தை கழுவினால், முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும். மேலும், இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் இல்லை.
நன்றி - Ogskinscare Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.