வாரத்தில் 2 நாட்கள் இதை மட்டும் பண்ணுங்க… முடி நல்லா இருக்கும்; நடிகை சிம்ரன் ப்யூட்டி டிப்ஸ்

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்த சிம்ரன், இன்றும் அதே பொலிவுடனும், புன்னகையுடனும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். காலம் கடந்தாலும், அவரது அழகுக்கு மட்டும் வயது கூடுவதேயில்லை

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்த சிம்ரன், இன்றும் அதே பொலிவுடனும், புன்னகையுடனும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். காலம் கடந்தாலும், அவரது அழகுக்கு மட்டும் வயது கூடுவதேயில்லை

author-image
WebDesk
New Update
Actress Simran

Actress Simran

சிம்ரன் இந்த ஒரு வார்த்தை போதும், 90'ஸ் கிட்ஸின் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிடும். தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்த சிம்ரன், இன்றும் அதே பொலிவுடனும், புன்னகையுடனும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். காலம் கடந்தாலும், அவரது அழகுக்கு மட்டும் வயது கூடுவதேயில்லை. 45 வயதை கடந்த பிறகும், எப்படி இவ்வளவு இளமையாகவும், ஃபிட்டாகவும் இருக்கிறார்? இது பலருக்கும் எழும் கேள்வி.  அதற்கான ரகசியங்களை சிம்ரனே மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். 

Advertisment

“ஸ்கின் கேர், ஹேர் கேர் இதெல்லாம் ஒரு பெண்ணின் அடிப்படைத் தேவைகள். இது அழகுக்காக மட்டும் இல்லை, நம்ம ஆரோக்கியத்துக்காகவும் கூட!

1. ஸ்கின் கேர்

நம்ம சருமத்தைப் நல்லா வெச்சுக்க நிறைய தண்ணீர் குடிக்கணும். அதுதான் ஸ்கின்னுக்கு முதல் மருந்து. அதுமட்டுமில்லாம, அதிகமா எண்ணெய் பலகாரம் சாப்பிடுவதை தவிர்க்கணும். எண்ணெய் அதிகமா சாப்பிட்டா, முகத்துல பிம்பிள்ஸ் வரும். பிம்பிள்ஸ் வந்தாலே, நம்ம முக அழகு குறைந்துவிடும். அதனால ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவோம்.

2. ஹேர் கேர்

Advertisment
Advertisements

தலைமுடி பராமரிப்பும் அதேபோல்தான். சீசன் மாறும்போது தலைமுடி உதிர்வது எல்லாருக்குமே நடக்கும். அதைத் தடுக்க, வாரத்துக்கு ஒருமுறையாவது எண்ணெய் தேய்க்கணும். சிலர் எண்ணெய் தேய்ப்பது நல்லது இல்லைன்னு சொல்லுவாங்க, ஆனா அதை நான் நம்பவே மாட்டேன். நான் வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்க்கிறேன். எண்ணெய் தேய்த்தால் தலைமுடிக்கு தேவையான சத்து கிடைக்கும், கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

3. உணவு

உணவைப் பற்றி பேசும்போது, நான் அசைவம், சைவம் இரண்டுமே சாப்பிடுவேன். ஒரு ஸ்பெஷலான உணவு முறைன்னு எதுவும் இல்லை. நல்ல சத்தான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலே நம்ம உடம்பு, முடி, சருமம் எல்லாமே நல்லா இருக்கும்”, என்று சிம்ரன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். 

இன்றைய நடிகைகள் பலரும் வயதான தோற்றத்தை மறைக்க அறுவை சிகிச்சைகள், ஃபில்லர்கள் என்று செயற்கையான வழிகளை நாடும் நிலையில், சிம்ரன் அதற்கு விதிவிலக்கு. நரைமுடிகளையும், முகச்சுருக்கங்களையும் மறைக்காமல், அவற்றை இயல்பாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார். தனது அழகை வயதோடு சேர்ந்து அனுபவித்து வருகிறார். இதுவே, அவரை இன்றும் ரசிக்கத்தக்க, உண்மையான அழகு ராணியாக நமக்கு காட்டுகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: