'நைட்டுக்கு நானே ஒரு கிரீம் ரெடி பண்ணி வச்சுருக்கேன்': சீரியல் நடிகை கவிதா சோலைராஜா பியூட்டி சீக்ரெட் இதுதானா?
நாம என்ன சாப்பிடுறமோ அதை சருமத்துக்கும் அப்ளை பண்ணலாம். அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, அதுல தயிர் இல்ல பால், மஞ்சள் எல்லாமே நான் முகத்துக்கும் போடுவேன்.
நாம என்ன சாப்பிடுறமோ அதை சருமத்துக்கும் அப்ளை பண்ணலாம். அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, அதுல தயிர் இல்ல பால், மஞ்சள் எல்லாமே நான் முகத்துக்கும் போடுவேன்.
பிரபல தமிழ் சீரியல் நடிகை கவிதா சோலைராஜா சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடித்து, சின்னத்திரை பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் என பல சீரியல்களில் நடித்தார்.
கவிதா சோலைராஜா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய சுய பராமரிப்பு குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
நைட்டுக்கு நானே ஒரு கிரீம் ரெடி பண்ணி வச்சுருக்கேன். பாதாம் எண்ணெய், கிளீசரின், ரோஸ் வாட்டர், கற்றாழை ஜெல், இது நான்குமே சம அளவு எடுத்து, நல்லா மிக்ஸ் பண்ணி வச்சுடுவேன். அது ஒரு வாரத்துக்கு வரும். நைட் மாய்ஸ்சரைசர் எல்லாம் போட்டதுக்கு அப்புறம் அதுக்கு மேல இந்த கிரீம் அப்ளை பண்ணிட்டு தூங்கிடுவேன்.
உண்மைய சொல்லனும்னா நான் இதுவரைக்கும் எந்த ஃபேஸ் மாஸ்க்கும் கடையில வாங்குனதில்ல. நாம என்ன சாப்பிடுறமோ அதை சருமத்துக்கும் அப்ளை பண்ணலாம். அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, அதுல தயிர் இல்ல பால், மஞ்சள் எல்லாமே நான் முகத்துக்கும் போடுவேன்.
Advertisment
Advertisements
அரிசி மாவு, தயிர், தேன் மிக்ஸ் பண்ணி ஃபேஸ் மாஸ்க் போடுவேன். அரிசி மாவு கொரகொரப்பா இருக்கிறதால நல்ல ஸ்கிரப் பண்ணும்.. தயிர், தேன் மாய்ஸ்சரைசர் கொடுக்கும், இப்படி பல விஷயங்களை கவிதா, ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது பகிர்ந்து கொண்டார்.