விஜய்யின் `தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்துள்ள சினேகா சமீபத்தில் லண்டன் சென்றார்.
அங்கு வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜில் தன் `சினேகாலயா சில்க்ஸ்’ பிராண்டின் பட்டுப் புடவைகளை அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
சென்னை தி.நகரில் `சினேகாலயா சில்க்ஸ்' பட்டுப் புடவை கடையை சில மாதங்களுக்கு முன் சினேகா திறந்தார்.
1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜ் தேம்ஸ் ஆற்றின் குறுக்கே உள்ள பல பாலங்களில் பழமையான ஒன்றாகும்.
346 கி.மீ. நீளமுள்ள தேம்ஸ் நதிதான் இங்கிலாந்திலேயே நீளமான நதி.
தேம்ஸ் நதி 1858-ம் ஆண்டில், இன்றைய சென்னையின் கூவம் நதியைவிடக் கடுமையாக மாசுபட்டிருந்தது.
1957-ம் ஆண்டில் தேம்ஸ் நதி உயிரியல்ரீதியாக ‘இறந்த நதி’யாக அறிவிக்கப்பட்டது. இதை அவமானமாகக் கருதிய அரசு, நதியை மீட்கும் முயற்சியில் இறங்கியது.
இன்று 346 கி.மீ நீளத்துக்கு ஓடும் தேம்ஸ் நதி, உலகின் தூய்மையான நகர்ப்புற நதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
125 வகையான மீன்கள், 400-க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்கள், நீர்ப் பறவைகள், கடல்நாய்கள், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் அதில் வாழ்கின்றன.
சிறந்த நதி மறுசீரமைப்புச் சாதனைக்கான உலகின் முதன்மை விருதான சர்வதேச தீயஸ் நதிப் பரிசை தேம்ஸ் நதி 2010-ம் ஆண்டில் வென்றது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.