1991 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. தொடர்ந்து கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
Advertisment
தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார்.
சுகன்யாவுக்கும், அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஸ்ரீதரன் என்பவருக்கும் நியூஜெர்சியில் கடந்த 2002-ல் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது.
சமீபத்தில் சுகன்யா, நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
Advertisment
Advertisements
அப்போது தன்னுடைய திருமண வாழ்க்கை கசப்பான அனுபவத்தில் முடிந்ததை சுகன்யா பகிர்ந்து கொண்டார்.
’முதல்ல நம்ம நேர்மையா இருக்கணும்,ரெண்டு பேருக்கும் பொருந்தி போகல, ஒருவேளை திருமண வாழ்க்கை சரியா அமையலனா அவுங்க அவுங்க வழியை பாத்துட்டு போறதுதான் நல்லது.
ஒரு சமுதாயத்துல 10 பேரு பார்க்கிறாங்க, நம்ம ஒழுக்கமா இருக்கணும், இந்த விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது. அநாகரீகம். நமக்கு மனசாட்சி இருக்கு இப்படி பல விஷயங்களை யோசிச்சு அவுங்க அவுங்க வேலைய பாத்துட்டு போகலாம்.
அப்படி இல்லையா? நீதிமன்றத்தை தான் அணுகனும். சமுதாயத்தை எதிர்த்து தான் ஆகணும். ஒரு பெண் போராடிதான் வர வேண்டியிருக்குனா, அதை பண்ணித்தான் ஆகணும். பயந்து ஓட தேவையில்லை. அதுக்கு அப்புறமும் வாழ்க்கை இருக்கு. இன்னைக்கு பலபேரு வாழ்க்கையில இது நடக்குது. அதுக்கு குடும்ப ஆதரவு கட்டாயம் இருக்கணும்.
ஆனா நிறைய விடுகள்ல அந்த ஆதரவே இல்லாம இருக்கு.
நீ திரும்பி வரக்கூடாது, 4 பேரு ஏதாவது சொல்லுவாங்க. நீ அங்கேயே இருக்கணும். இப்படி அழுத்தம் கொடுக்கிறதுனால நிறைய விஷயங்கள் தற்கொலை அளவுக்கு போயிடுது.
ஊரடங்கு அப்போ நிறைய பேருக்கு உடம்பு சரியில்லாம போனது ஒரு துயரமான விஷயமா இருந்தாலும், வீட்டுல இருக்கிறது நிறைய பேருக்கு புடிக்கல.
என்னைப் பொருத்தவரைக்கும் இதை நான் அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டேன். அப்போதான் சமஸ்கிருதத்துல ஒரு கோர்ஸ் முடிச்சேன். ஆர்ட் அண்ட் ஆர்கிடெக்ட்சர், டெம்பிள் டூரிசம் பத்தி டிப்ளமோ கோர்ஸ் பண்ணேன். இந்தமாதிரி நிறைய விஷயங்களை செய்யலாம்.
இது ஏன் சொல்றேனா? நெகட்டிவ்வா உலகமே இடிஞ்சு போயி உட்காந்துருக்கும் போது, உங்களுக்குன்னு ஒரு உலகத்தை அமைச்சுக்கலாம், அதேமாதிரி பெண்கள் கட்டாயம் உடைந்து போகக் கூடாது. உங்க பக்கம் நியாயம் இருந்தா தைரியமா எடுத்து சொல்லுங்க. அதுல இருந்து வெளியே வர பாருங்க… என்றார் சுகன்யா.
அப்போது சித்ரா லட்சுமணன், திருமணம் பந்தம் மூலமாக பெண்கள் சுய நலத்துக்காக பயன்படுத்திக்க படுறாங்களா என சுகன்யாவிடம் கேட்டார்.
அதற்கு சுகன்யா கட்டாயமா பயன்படுத்திக்கிறாங்க என்றார். பிஸிகல் அப்யூஸ், மெண்டல் அப்யூஸ் இருக்கு. இதுல நிறைய பெண்கள் பாதிச்சு இருக்காங்க…
அதெல்லாம் ஓரளவுக்கு பொறுமையா போலாம். சகிப்புத் தன்மை ஓரளவுக்குத்தான் ஏத்துக்க முடியும். இல்லன்னா சொல்லிட்டு வந்துரணும்.
நீதிமன்றத்துல எனக்கு விவகாரத்து கிடைக்க ரொம்ப வருஷங்கள் ஆச்சு.. அதெல்லாம் நிறைய பேருக்கு நடக்கக் கூடாது, என்றார்.
அப்போது மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இருக்கா என்று சித்ரா லட்சுமணன் கேட்க, அப்படி ஒரு எண்ணம் இதுவரைக்கு வந்தது இல்லை என்றார் சுகன்யா…
”1972ல நான் பிறந்தேன். இப்போ எனக்கு 50 வயசு ஆகுது. இதுக்கு அப்புறம் கல்யாணம், குழந்தைனா.. குழந்தை வந்து என்னை பாட்டினு கூப்பிடுமா இல்ல அம்மானு கூப்பிடுமானு எனக்கே யோசனையா இருக்கு…
நான் வேணும் சொல்லல, வேண்டாம்னு சொல்லல
எது எப்படி நடக்கணுமோ அப்படி விட்டுட்டேன்… இப்படி பல விஷயங்களை சுகன்யா டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்….
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil