/indian-express-tamil/media/media_files/2025/08/28/nose-pin-2025-08-28-15-28-11.jpg)
Actress Swarnamalya
தமிழ் பண்பாட்டில் மூக்குத்திக்குத் தனியிடம் உண்டு. சிலருக்கு மூக்குத்தி என்பது ஒரு அணிகலனாக மட்டும் இல்லாமல், அவர்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம். காலத்திற்கு ஏற்ப, மூக்குத்திகளின் வடிவமைப்பும் மாறிக்கொண்டே வருகிறது. சின்னச் சின்ன கற்கள் பதித்த மூக்குத்திகள், வைர மூக்குத்திகள், சாதாரண வட்ட மூக்குத்திகள் என விதவிதமான வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. தற்போதைய ட்ரெண்டில், சிம்பிளாக, சிறியதாக ஒரு மூக்குத்தி அணிவது ஃபேஷனாக உள்ளது.
நடிகை ஸ்வர்ணமால்யா அதில் ஒருவர். இந்த வீடியோவில், நடிகை ஸ்வர்ணமால்யா தான் அணிந்திருக்கும் மூக்குத்தி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
"கார்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி, ஸ்வர்ண மாலியாக்கு மூக்குத்தி. நான் நாள் முழுக்க மூக்குத்தி போட்டுட்டு இருப்பேன். என்னை பார்க்கிறவங்க எல்லாரும், என் மூக்குத்தியை பார்த்து, "ரொம்ப அழகா இருக்கு," "இவ்வளவு பெரியதா போட்டிருக்கீங்களே," இப்படி ஏதாவது ஒரு கமெண்ட் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
இதை 'ஸ்ரீதேவி மூக்குத்தி'னு சொல்வாங்க. ஏன்னா அந்த காலத்துல ஸ்ரீதேவி இந்த மாதிரி மூக்குத்தி போட்டிருந்தாங்க.
இதுல ரூபி, எமரால்டு, கூடவே ஒரு போல்கி டைமண்டும் இருக்கு. இந்த மூக்குத்தி ஸ்பெஷல் என்னன்னா, இது ஒரு ஆன்டிக் பீஸ். ஒரு கடையில இதை பார்த்ததும் ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதை அப்பவே வாங்கி உடனே மூக்குல போட்டுக்கணும்னு அடம் பிடிச்சு அங்கேயே போட்டுக்கிட்டு வந்தேன்.
இப்ப என் கிட்ட டைமண்ட்ஸ் மற்றும் டர்கோய்ஸ்ல ஒரு மூக்குத்தி இருக்கு. இதுல இருக்கிறது ஒரிஜினல் டர்கோய்ஸ். டர்கோய்ஸ் எல்லாம் மூக்குத்திக்கு ஃபேன்ஸி ஸ்டஃபா தான் கிடைக்கும். ஆனா இதை கோல்டுல செட் பண்ணி போட்டா, ரொம்ப நாள் லாஸ்ட்டிங் வரும். அதோடு ரொம்ப அழகாகவும் இருக்கும்"...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.