விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து பிரபலமானவர் வைஷ்ணவி அருள்மொழி. இவரது நீள முடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வைஷ்ணவி ஒருமுறை Say Swag யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய முடி மற்றும் சரும பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
Advertisment
சரும பராமரிப்பு பொறுத்தவரைக்கும், கற்றாழை, பப்பாளி முகத்துக்கு அப்ளை பண்ணுவேன். அரிசி மாவு, மஞ்சள், தயிர் மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடும் போது டேன் கொஞ்சம் கொஞ்சமா ரிமூவ் ஆகும்.
உங்களுக்கு முகப்பரு வந்தா அதை கிள்ளக்கூடாது. முகத்துக்கு தினமும் கற்றாழை போடலாம். எப்போவுமே ஹைட்ரேடா வச்சுக்கணும். தண்ணீர் அதிகமா குடிக்கணும். எனக்கு முகப்பரு வந்தா, அம்மா கிராம்பு அரைச்சு, தேன்ல மிக்ஸ் பண்ணி தருவாங்க. மஞ்சள் யூஸ் பண்ணுவேன். இது எல்லாமே எனக்கு வேலை செய்ஞ்சிருக்கு.
வெந்தயம் ஊறவச்சு அரைச்சி அந்த பேஸ்டை தலைக்கு தடவலாம். அதுக்கூட தயிரும் சேர்த்துக்கலாம். முடி நுனி வரை பேஸ்ட் தடவுங்க. நுனி முடி உங்களுக்கு உடைஞ்சிருந்தா அடிக்கடி வெட்டி விடுங்க. அதேபோல முடிக்கு கற்றாழை தடவலாம். அதிகமா ஹேர் ஸ்ட்ரைட்னிங் பண்ணக்கூடாது. கறிவேப்பிலை அரைச்சு அதுக்கூட கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, ஸ்பிரே பாட்டில்ல வச்சு, அடிக்கடி உச்சந்தலை, முடி வேர்கள்ல ஸ்பிரே பண்ணலாம்.
இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம் சரியான நேரத்துக்கு சாப்பிடணும், சரியான நேரத்துக்கு தூங்கணும். தூக்கம் கம்மியானா முடி குறைஞ்சிரும், இவ்வாறு வைஷ்ணவி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.