/indian-express-tamil/media/media_files/2025/02/09/Nibe6TMQ9QoO8h9U03td.jpg)
பணியின் நிமித்தமாக அடிக்கடி வெயிலில் சுற்ற வேண்டி இருப்பவர்களுக்கு அவர்களது சருமத்தை பாதுகாப்பது மிகவும் சவாலான காரியம். அதிலும், முகம் கருமையாக மாறுவதை தடுக்க வேண்டும் என எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றினாலும், அவை சில சமயத்தில் பலன் அளிக்காது.
மேலும், சிலருக்கு திரை பிரபலங்கள் பயன்படுத்தும் பொருட்களை தங்கள் சரும பராமரிப்பில் பயன்படுத்த வேண்டும் என ஆவல் இருக்கும். அந்த வகையில் நடிகை வைஷ்ணவி அருள்மொழி, தான் பயன்படுத்தக் கூடிய இரசாயனங்கள் கலக்காத ஹோம்மேட் ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது என பகிர்ந்து கொண்டார்.
தயிர், அரிசி மாவு மற்றும் மஞ்சள் ஆகியவை கொண்டு நம் முகத்தில் இருக்கக் கூடிய கருமையை நீக்கலாம் என நடிகை வைஷ்ணவி அருள்மொழி தெரிவித்துள்ளார். அதற்கான ஃபேஸ்பேக்கை தயாரிப்பதற்கான வழிமுறையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தயிர், அரிசி மாவு மற்றும் மஞ்சள் ஆகிய மூன்றையும் நம் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு கலக்க வேண்டும். இந்தக் கலவை பசை பதத்திற்கு வந்ததும், இதனை நம் முகத்தில் தேய்க்க வேண்டும்.
இந்த ஃபேஸ்பேக் முழுவதுமாக காய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை முகத்தில் தேய்த்து சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும். மேலும், முகத்தில் இருக்கும் கருமையும் மறையத் தொடங்கும். இந்த ஃபேஸ்பேக்கில் இரசாயனங்கள் இல்லாததால், இதனை தொடர்ச்சியாகவும் பயன்படுத்தலாம்.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.