விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது.
ஏற்கனவே 2 திருமணம், ஒரு காதல் ஆகியவற்றை கடந்து வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஓரிரு மாதங்களிலேயே இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வனிதா பழையபடி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.தற்போது டிவி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல் போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற வனிதா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவர் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வருவதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
குறிப்பாக தன்னுடைய யூடியூப் சேனில் அவ்வபோது ஷாப்பிங் வீடியோக்கள், ட்ராவல் வீடியோக்கள், சமையல் மற்றும் ஹெல்த் டிப்ஸ், போன்ற பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார். வனிதாவிற்கு புடவை கட்டுவது மிகவும் பிடிக்கும். அதுவும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு அதிக இடங்களுக்கு பயணம் செய்ததாக கூறியுள்ளார். அவர் எங்கு சென்றாலும் அவர் கட்டியுள்ள புடவை பற்றி ஏராளமானோர் கேட்டதாக கூறுகிறார். தற்போது மீஷோ செயலியில் அவர் லேட்டஸ்டாக வாங்கியுள்ள சாரீஸ் கலெக்ஷன் குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ். அவர் புடவைகள் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவில் அனிதா அவருடைய அம்மாவை பற்றி பேசியுள்ளார்.வனிதாவின் சாரீஸ் டேஸ்ட் அவங்க அம்மா மஞ்சுளாவை போல்தானாம். மஞ்சுளா விஜயக்குமாருக்கும் ப்ளாக் அண்ட் ஒயிட் கலரில் புடவைகள் உடுத்துவதற்கு மிகவும் பிடிக்கும். அதேபோலவே வனிதா வாங்கியிருக்கும் பெரும்பலானா புடவைகள் அந்த கலரில் தான்.
தற்போது வெயில் காலம் என்பதால் காட்டன் உடைகளை அனைவரும் அணியுங்கள் என வலியுறுத்தும் வனிதா நிறைய காட்டன் புடவைகளை வாங்கியுள்ளார். ட்ரண்டி உமென் காட்டன் மல்மல் சாரீஸ், ட்ரண்டி காட்டன் சாரீஸ், கோரா சில்க் சாரீஸ், காட்டன் நெட் சாரீஸ் போன்ற வகைகளில் கான்ட்ராஸ்ட் கலரில் வாங்கியுள்ளார். ஆபிஸ் மீட்டிங், பொது நிகழ்ச்சிகள், ஷாப்பிங் செல்ல என தனித்தனியாக சாரீஸ் வாங்கி குவித்திருக்கும் வனிதா மீஷோ ஆப்பில் உடைகள் வாங்குவதை சஜஸ்ட் செய்கிறார்.
மீஷோ ஆப்பில் பொருட்கள் வாங்குவது மட்டுமல்ல அந்த ஆப் மூலம் ஆடைகளை விற்று மாதந்தோறும் 25000 வரை சம்பாதிக்கலாம் என கூறும் வனிதா, ஏராளமான பெண்கள் இதை பயன்படுத்தி பயனடையலாம் என கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.