நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
Advertisment
தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டகோழி 2, சர்கார், மாரி 2 எனப் பல படங்களில் சவாலான வேடங்களில் நடித்து’ தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர் வரலட்சுமி சரத்குமார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்’ 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
'கண்ணாமூச்சி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வரலட்சுமி.
உன்னை அறிந்தால்’ நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரையில்’ தொகுப்பாளராக அறிமுகமானார்.
சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார், சென்னையில் இருந்து ஹைதராபாத்தில் நிரந்தரமாக குடியேறினார்.
வரலட்சுமி பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 'யசோதா'தெலுங்கு திரைப்படம் தவிர சில படங்கள் போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளன.
வரலட்சுமி ‘தெனாலி ராமகிருஷ்ணா BA.BL’ படம் மூலம் 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமானார்.
2021ல் வந்த ‘நாந்தி’ படம் இவருக்கு விமர்சன ரீதியாக பாராட்டை வாங்கிக் கொடுத்தது.
பிரசாந்த் வர்மாவின் வரவிருக்கும் பான்-இந்தியா படமான 'ஹனுமான்' படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“