நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
Advertisment
தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டகோழி 2, சர்கார், மாரி 2 எனப் பல படங்களில் சவாலான வேடங்களில் நடித்து’ தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர் வரலட்சுமி சரத்குமார்.
வரலட்சுமி’ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்’ 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
'கண்ணாமூச்சி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வரலட்சுமி.
உன்னை அறிந்தால்’ நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரையில்’ தொகுப்பாளராக அறிமுகமானார்.
ஒருமுறை பத்திரிக்கை பேட்டியின்போது வரலட்சுமி கூறுகையில், எனக்கு ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிப்பது பிடிக்காது. என்னைப் பொறுத்தவரை, நடிப்பு என்பது ஒரு ஆர்வம் மற்றும் நான் செய்ய விரும்பும் வேலை. தமிழ் படங்களில் பெண் கதாபாத்திரங்கள், நெகட்டிவ் ரோல்கள், சிறப்பு கேரக்டர்கள் என பல வேடங்களில் நடித்துள்ளேன். ஒரு நடிகையாக என்னால் எதையும் செய்ய முடியும். நான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை.
"வெளிநாட்டில் டூயட், நாயகனுடன் காதல் என்றெல்லாம் நடிப்பதற்கு பல பேர் இருக்கிறார்களே. நானும் அதை பண்ண வேண்டுமா. என்னைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ. கதாநாயகி என்று அழைப்பதை விட, கதையின் நாயகி என்று அழைப்பதை விரும்புபவள் நான். கதை நன்றாக இருந்தால் போதும், என் கதாபாத்திரம் சிறிதாக இருந்தால் கூட தயக்கமின்றி நடிப்பேன். நான் நாயகியா, வில்லியா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை" என்று கூறினார்.
சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார், சென்னையில் இருந்து ஹைதராபாத்தில் நிரந்தரமாக குடியேறினார்.
தொழில் ரீதியாக, வரலட்சுமி இப்போது பல தமிழ் படங்களில் நடிக்கிறார். மேலும் ஒரு சில கன்னட திரைப்படம் மற்றும் 'யசோதா'தெலுங்கு திரைப்படம் தவிர சில படங்கள் போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளன.
வரலட்சுமி ‘தெனாலி ராமகிருஷ்ணா BA.BL’ படம் மூலம் 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமானார். 2021ல் வந்த ‘நாந்தி’ படம் இவருக்கு விமர்சன ரீதியாக பாராட்டை வாங்கிக் கொடுத்தது.
பிரசாந்த் வர்மாவின் வரவிருக்கும் பான்-இந்தியா படமான 'ஹனுமான்' படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “