வட்டாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வசுந்தரா. பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி, பக்ரீத் போன்ற படங்களின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்றார்.
வசுந்தரா காஷ்யப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபமாக தனக்கு பிடித்த ஃபுட் காம்பினேஷன் வீடியோஸை பகிர்ந்து வருகிறார்..
பொட்டடோ சிப்ஸ்- சாம்பார், பொட்டடோ பிரைஸ் வித் பாம்பே சட்னி, ஃபில்டர் காபி- சிப்ஸ், அப்பளம் வித் ஐஸ்கிரீம், ஹாட் சாக்லேட் வித் சீஸ் காம்பினேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
இந்த வீடியோஸை பார்த்த ரசிகர்கள் தயிர் சாதம்-கெட்ச் அப், கேசரி வித் உப்புமா, சர்க்கரை பொங்கல் - பொட்டடோ சிப்ஸ் என தங்களின் ஃபேவரைட் ஃபுட் காம்பினேஷன் பற்றி கமென்டில் பதிவிட்டனர்.
அதையும் வசுந்தரா முயற்சி செய்து பார்த்து எப்படி இருக்கிறது என்று இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோஸ் பாருங்க
உங்களோட ஃபேவரைட் ஃபுட் காம்பினேஷன் என்ன?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“