கேரள அடை பிரதமன். ஒரு முறை இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
அடை - ½ கப்
வெல்லம் – 1 கப்
நெய்- 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்
தண்ணீர்
வறுத்த முந்திரி
வறுத்த திராட்சை
கெட்டி தேங்காய் பால்- 1 கப்
தேங்காய் துண்டுகள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடையை வேக வைத்து கொள்ளுங்கள். அடை வெந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அடையை போட்டு கிண்ட வேண்டும். வெல்லப் பாகை சேர்த்து கிளரவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, வறுத்த திராட்சை சேர்த்து கிளரவும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அனைத்துவிட்டு தேங்காய் பால் ஊற்றவும். தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“