adai dhosa recipe tamil adai dhosa: வீட்டில் அரைத்த மாவு தீர்ந்து போனாலோ அல்லது தினமும் தோசை , சப்பாத்தியா என அலுத்துப்போனாலும் இப்படி அடை தோசை செய்து சாப்பிடலாம். இதை ஊற வைத்து அரைக்க 2 மணி நேரம் போதும் என்பதால் ஈசியாகவும் இருக்கும்.
Advertisment
இரவு டின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இல்லத் தரசிகளுக்கு அடை தோசை நல்ல ரெசிபியாக இருக்கும். எளிதில் மொறு மொறுவென சுட்டு அசத்துங்கள்.
adai dhosa recipe tamil : அடை தோசை செய்முறை!
ஒரு பாத்திரத்தில், அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், இதனை மிக்சியில் அரைத்துக் தோசை மாவு பதத்திற்கு கொள்ளவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள், மஞ்சள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மாவுடன் சேர்க்கவும்.
Advertisment
Advertisements
அத்துடன் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறவும். இறுதியாக, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடை மாவை ஊற்றி தோசைப் போல் சுட்டால் சுவையான பருப்பு அடை தோசை ரெடி..!.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil