தோசை மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்கிறார்கள். இவை நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்புடன்வைத்திருப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை தருகிறது. இப்படிப்பட்ட அற்புதமான உணவை எளிய முறையில் எவ்வாறு செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - ஒரு கப்,
துவரம் பருப்பு - அரை கப்,
பச்சரிசி - கால் கப்,
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி,
மிளகாய் வத்தல் - 5 (காரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்),
பெருங்காயம் - கால் தேக்கரண்டி,
தேங்காய் - கால் மூடி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி இலை – சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
செய்முறை
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அவற்றோடு மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதோடு தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் நறுக்கிய தேங்காய், வெங்காயம், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். இப்போது அந்த மாவை தோசை கல்லில் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கலாம்.
இந்த சுவை மிகுந்த அடைக்கு ஏற்ற சைடிஷ் தேங்காய் சட்னி மற்றும் சீனி தொட்டு ஆகும். இவற்றோடு உங்கள் காலை உணவை துவங்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“