பச்சரிசி, உளுந்து, மிளகு: புதுவித அடை தோசை; இப்படி செய்து பாருங்க

மிளகு அடை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

மிளகு அடை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
adai
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவையான மிளகு அடை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1/2 கப்
உடைத்த கருப்பு உளுந்து– 1/4 கப்
மிளகுத் தூள் – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1 கப்
கறிவேப்பிலை – 20 இலைகள்
தேங்காய்த் துருவல் – 1 கப்
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை 

Advertisment
Advertisements

இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்
அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து தண்ணீர் வடித்து ஊற வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த பின் தேவைப் பட்டால் தண்ணீர் சேர்த்து கலக்கலாம். 

அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் தயாரித்து வைத்த மாவு ஊற்றவும். சுற்றி எண்ணெய் ஊற்றி வேக விடவும். அடை பொன்னிறமாக வெந்து வந்ததும் எடுத்து பரிமாறலாம். சுவை, ஆரோக்கியமான அடை தோசை ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: