சோறு வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் இதை சேருங்க… எண்ணெய் பிசுக்கு நிறைந்த கேஸ் ஸ்டவ் ஈசியா சுத்தம் செய்யலாம்!

தூக்கி எறியப்படும் பொருளான சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் வீட்டைச் சுத்தப்படுத்த ஒரு சிறந்த பொருள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆர்.டி.எஸ். ஹெல்தி கிச்சன் என்ற யூடியூப் சேனலில் கஞ்சித் தண்ணீரை வைத்து எப்படி? வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது என்று விளக்கி காட்டப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 clean a gas stove full

சோறு வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் இதை சேருங்க… எண்ணெய் பிசுக்கு நிறைந்த கேஸ் ஸ்டவ் ஈசியா சுத்தம் செய்யலாம்!

தூக்கி எறியப்படும் பொருளான சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் வீட்டைச் சுத்தப்படுத்த ஒரு சிறந்த பொருள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆர்.டி.எஸ். ஹெல்தி கிச்சன் என்ற யூடியூப் சேனலில் கஞ்சித் தண்ணீரை வைத்து எப்படி? வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது என்று விளக்கி காட்டப்பட்டுள்ளது.

Advertisment

கஞ்சி தண்ணீரின் பயன்கள்:

  • கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்: கஞ்சி தண்ணீரில் சிறிது பேஸ்ட் கலந்து கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கழுவினால், அவை புதிது போல் பளபளக்கும்.
  • எண்ணெய் பிசுக்கு: எண்ணெய் பாட்டில் மற்றும் சமையல் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்கை கஞ்சி தண்ணீர் ஸ்ப்ரே மூலம் எளிதில் அகற்றலாம்.
  • சரும பாதுகாப்பு: கஞ்சி தண்ணீரை முகத்தில் தடவினால், சருமம் சுருக்கங்கள் இல்லாமல் பளபளப்பாக இருக்கும். இதனுடன் அரோலா ஜெல் சேர்த்து ஐஸ் க்யூப்ஸாகப் பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?

Advertisment
Advertisements

சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்ய, கஞ்சி தண்ணீரில் சிறிது பேஸ்ட் கலந்து கழுவவும். எண்ணெய் பிசுக்கை அகற்ற, கஞ்சித் தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எண்ணெய் பிசுக்கு உள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்து துணியால் துடைக்கவும். சருமத்திற்கு பயன்படுத்த, கஞ்சி தண்ணீரை முகத்தில் தடவவும் அல்லது அரோலா ஜெல் சேர்த்து ஐஸ் க்யூப்ஸாகப் பயன்படுத்தவும். இந்த எளிய முறைகளைப் பின்பற்றி, வீட்டை சுத்தமாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

1. எண்ணெய் பிசுக்கிற்கு தீர்வு: அடுப்பங்கரையில் இருக்கும் எண்ணெய் பாட்டில்கள், கிச்சன் அலமாரிகள், அடுப்பு மேடை கூட எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும். இந்த எண்ணெய் பிசுக்கை நீக்குவது பெரிய வேலையாக இருக்கும். கஞ்சித் தண்ணியோடு பேஸ்ட்டை கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை எண்ணெய் பிசுக்கு உள்ள இடங்களில் ஸ்ப்ரே செய்து துணியால் துடைத்தால், எண்ணெய் பிசுக்கு மாயமாய் மறையும். கஞ்சித் தண்ணியை தினமும் புதிதாகத் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அது சீக்கிரமே புளித்துவிட வாய்ப்புள்ளது. சாதம் வடித்ததும், தேவையான அளவு எடுத்துக்கொண்டு அன்றே பயன்படுத்திவிடலாம்.

2. எண்ணெய் பசையுள்ள துணிகளை சுத்தம் செய்ய: சமையல் செய்யும் போது எண்ணெய் கறை படியும் துணிகளை சுத்தம் செய்வது கடினம். அதற்கும் கஞ்சித் தண்ணி கைக்கொடுக்கும். கஞ்சித் தண்ணியுடன் 1 அல்லது 2 கப் சாதாரண தண்ணீர், கல் உப்பு, 2 ஸ்பூன் பேஸ்ட் மற்றும் ஒரு ஷாம்பு பாக்கெட் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். இந்த கரைசலில் எண்ணெய் கறைகள் படிந்த துணிகளைப் போட்டு கொதிக்க வைத்தால், எண்ணெய் பிசுக்கு, கிருமிகள், அழுக்கு என அனைத்தும் நீங்கி துணிகள் சுத்தமாகும். கொதித்த பிறகு, வழக்கம் போல் துவைத்து வெயிலில் காய வைத்தால், துணிகள் பளபளக்கும்.

நன்றி: ஆர்.டி.எஸ். ஹெல்தி கிச்சன்

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: