நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாக, அடினாய்டுஸ் (adenoids) தொண்டையில் காணப்படும் திசுக்கள் ஆகும், இது pharynx என்றும் அழைக்கப்படுகிறது, இது உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இருப்பினும், அடினாய்டுகளின் வீக்கம் அடினாய்டிடிஸுக்கு (adenoiditis) வழிவகுக்கிறது – இதனால் அடினாய்டுஸ் வீங்கும் அல்லது விரிய தொடங்கி, மூச்சுக்குழாய்களைத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம், இது மூக்கின் வழியாக சுவாசிப்பதை கடினமாக்குகிறது.
டாக்டர் அமிதாப் மாலிக் கருத்துப்படி, அடினாய்டுகள், டான்சில்களுடன் சேர்ந்து, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பின் முதல் வரிசையாகும். ஆனால் தொற்று காரணமாக அடினாய்டுகள் வீக்கமடையும் போது, அது அடினாய்டிடிஸுக்கு வழிவகுக்கிறது.
பொதுவாக குழந்தைகளுடன் தொடர்புடைய, அடினாய்டிடிஸ் குறட்டை, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் அல்லது வறட்சி, வாய் வழி சுவாசம் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, அடினோயிடிடிஸின் முக்கிய காரணங்களில் சில ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus) எனப்படும் பாக்டீரியா ஆகும். இருப்பினும், இது அடினோவைரஸ், ரைனோவைரஸ் மற்றும் எப்ஸ்டீன்-பார் வைரஸ் ஆகியவற்றால் ஏற்படலாம். சில ஒவ்வாமைகளும் அடினாய்டுகளின் வீக்கத்தைத் தூண்டும், என்று அவர் கூறினார்.
யாருக்கு ஆபத்து?
சில ஆபத்து காரணிகள் உங்களை அடினோயிடிடிஸ் நோயால் பாதிக்கலாம், இவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:
*தொண்டை, கழுத்து அல்லது தலையில் மீண்டும் மீண்டும் தொற்றுகள்
* டான்சில்ஸ் தொற்று
*காற்றில் பரவும் வைரஸ்கள், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுடன் தொடர்பு
அடினாய்டுகள் பொதுவாக இளவயதில் சுருங்குவதால், குழந்தைகள் இந்த நோய்த்தொற்றுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், அலர்ஜியால் அவதிப்படுபவர்கள், படுத்த நிலையில் தாய்ப்பால் கொடுப்பவர்கள், மூக்கு அல்லது தொண்டைக்கு அருகில் தொற்று உள்ளவர்கள் இந்நிலைக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளது.
எனவே, டான்சில்லிடிஸ் அல்லது தொடர்ச்சியான தொண்டை, கழுத்து மற்றும் காது நோய்த்தொற்றுகள் உள்ள குழந்தைகள் மற்றும் ஒவ்வாமை அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் அடினோயிடிடிஸுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்று டாக்டர் மாலிக் மேலும் கூறினார்.
அறிகுறிகள் என்ன?
*தொண்டை வலி
*மூக்கடைப்பு
*கழுத்தில் வீங்கிய சுரப்பிகள்
* காது வலி மற்றும் பிற காது பிரச்சனைகள்
*நாசி ஒலியுடன் பேசுதல்

உங்கள் மருத்துவர், உங்களை காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம், அவர் நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய உடல் பரிசோதனை செய்வார்.
சிகிச்சை
வீக்கமடைந்த அடினாய்டல் திசுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் ஆன்டி பயாடிக்ஸ் மூலம் அடினோயிடிடிஸ் சிகிச்சையளிக்கப்படலாம். இருப்பினும், ஒரு வைரஸ் அடினாய்டிடிஸை ஏற்படுத்தினால், சிகிச்சைத் திட்டம் வைரஸைப் பொறுத்தது. ஒருவேளை ஆன்டி பயாடிக்ஸ் உதவவில்லை மற்றும் அறிகுறிகள் மோசமடைந்தால், உங்கள் அடினாய்டுகளை அகற்ற அடினோயிடெக்டோமி எனப்படும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
குறட்டை, தூக்கத்தில் தொந்தரவு மற்றும் தொடர்ச்சியான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் கடுமையான நிகழ்வுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும் என்று டாக்டர் மாலிக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“