Adithi Rao Hydari Beauty Secrets Tamil News : மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தியோடு இணைந்து நடித்த ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் அதிதி ராவ் ஹைதரி. 2007-ம் ஆண்டு ‘ஸ்ரீங்காரம்’ எனும் தமிழ்ப் படம் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்த அதிதி, தொடர்ந்து பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்தார். மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
காற்று வெளியிடையை தொடர்ந்து தமிழில் ‘செக்க சிவந்த வானம்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் தோன்றி தனக்கென தனி ரசிகர்களையும் உருவாக்கியுள்ளார். வேற்று மொழியாக இருந்தாலும், இவருடைய லிப் சிங்க் என்றைக்குமே நான்-சிங்க்கில் போனதே இல்லை. அந்த அளவிற்கு மிகவும் டெடிகேடட் ஆர்ட்டிஸ்ட் இவர்.
இவருடைய சமீபத்திய போட்டோஷூட் டாப் க்ளாஸ். ஃபில்டர் ஏதும் போடாமலேயே ஆரோக்கியமான சருமத்தில் காணப்படும் அதிதி, தன்னுடைய ஸ்கின்கேர் சீக்ரெட்ஸ் பற்றியும் பகிர்ந்துள்ளார். காலையில் எழுந்ததும் ‘ஆயில் புல்லிங்’ செய்தபிறகு ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யும் அதிதி, முகம் கழுவ என்றைக்குமே சோப் பயன்படுத்தவே மாட்டாராம். அதற்கு பதிலாகத் தயிர் அல்லது பாலில் கடலை மாவு கலந்து முகத்தில் போட்டுக்கொள்வாராம். பருக்களுக்கு அவருடைய சாய்ஸ் சந்தன பௌடர். பெரும்பாலும் சமையலறையில் இருக்கும் பொருள்கள்தான் இவருடைய பியூட்டி பேக் தேர்வு.
அதேபோல ஆரோக்கியமான சருமத்திற்கு அதிதி உட்கொள்ளும் உணவுகளில் நிச்சயம் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தவிர்க்கமுடியாதது. பூசணி ஜூஸ், அதிகமான காய்கறிகள் நிச்சயம் அவருடைய டயட்டில் இருப்பவை. சருமத்தை எப்போதும் ‘ஹைட்ரேட்டடாக’ வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதற்கு அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிற குறிப்போடு தன் பியூட்டி சீக்ரெட்ஸை நிறைவு செய்கிறார் அதிதி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Adithi rao hydari beauty secrets psycho kaatru veliyidai tamil news
அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் – மான் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை
மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்; மீண்டும் கொளத்தூர் தொகுதியை தேர்வு செய்தது ஏன்?
வெறும் காமெடி பொண்ணு இல்லை; இசை குடும்ப வாரிசு: ஷிவாங்கி பர்சனல்