Advertisment

திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹங்காவில் ஒளிர்ந்த அதிதி ராவ்: ஆடைத் தேர்வில் ஸ்டைலிஸ்ட்கள் கூறும் ரகசியம்

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது அவர்கள் உடுத்தியிருந்த உடைகள் பலரது கவனத்தையும் ஈர்த்தன.

author-image
WebDesk
New Update
Sid and Aditi

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இவை ரசிகர்களின் கனவத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஃபேரிடேல் வெட்டிங் போன்று இருப்பதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Aditi Rao Hydari marries Siddharth in a Sabyasachi red lehenga; celeb stylist shares ways to style a similar look

 

இதில் ஸ்டைலிஸ்ட் சப்யாசாச்சி முகர்ஜி டிசைன் செய்திருந்த சிவப்பு நிற லெஹங்காவை அதிதி அணிந்திருந்தார். இவை பார்ப்பதற்கு பேஸ்டல் மற்றும் மெட்டாலிக் டோன்களில் அமைந்திருந்தன. மேலும், சித்தார்த் ஐவரி நிறத்திலான ஷேர்வானி அணிந்திருந்தார். இந்த நிற உடைகள் பார்ப்பதற்கு அழகியலாக இருந்தன.

அதிதி, மிகக் குறைந்த வேலைப்பாடுகள் நிறைந்த முழுக்கை ரவிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்தார். மேலும், தங்க நிறத்திலான எம்பிராய்டரியும் அவரது லெஹங்காவில் மின்னியது. இவை, சப்யாசாச்சியின் நுட்பமான வேலைப்பாடை காண்பித்தன.

 

 

மேலும், தங்க நிற ஜரிகையுடன் கூடிய துப்பட்டாவை அதிதி அணிந்திருந்தார். இது அவரது பாரம்பரிய உடைக்கு நேர்த்தியாக அமைந்தது. இந்த துப்பட்டாவை அவர் தனது ஒரு தோலின் மீது போட்டிருந்தது, லெஹங்காவிற்கு மேலும் அழகு சேர்த்தது.

மேலும், கழுத்தை ஒட்டிய ஒரு நெக்லஸ், தொங்கும் காதணிகள் போன்ற நகைகளை அவர் திருமணத்தின் போது அணிந்திருந்தார். அவரது கூந்தல் மலர்களால் தாழ்வாக பின்னப்பட்டிருந்தது. இதில் அவரது தோற்றம் மென்மையாக காணப்பட்டது. வண்ணம் இல்லாத உதட்டுச் சாயம், வெட்கம் நிறைந்த கன்னங்கள் ஆகியவை அவரை மணமகளாக்கின. 

 

 

சித்தார்த்தும் எம்பிராய்டரி மற்றும் அழகுபடுத்தப்பட்ட பொத்தான்களுடன் ஐவரி நிற ஷெர்வானி அணிந்து அதிதிக்கு பொருத்தமாக இருந்தார். அதற்கு சூட் ஆகும் வகையில் சித்தார்த் அணிந்திருந்த பேன்ட் அவரை பார்ப்பதற்கு ராயலாக காண்பித்தது.

அடுக்கு முத்து மாலை அணிந்ததன் மூலம், எளிமையாகவும், கம்பீரமாகவும் சித்தார்த் காட்சியளித்தார். மேலும், அவரது சீரான தலைமுடி மேலும் அழகூட்டியது.

அதிதி மற்றும் சித்தார்த்தின் ஃபேஷன் குறிப்புகளை ஒப்பனையாளர் ரிஷி ராஜ், இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பகிர்ந்து கொண்டார். 

சிவப்பு நிற லெஹங்காவைத் தேர்ந்தெடுக்கும் மணப்பெண்களுக்கு:

சிவப்பு நிறம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றுடன் அழகாக ஒன்றிவிடும்.

வெள்ளை நிற மலர்களை அவர்கள் தேர்வு செய்யலாம். குறிப்பாக, வெள்ளை ரோஜாக்கள் சிறப்பாக இருக்கும்.

ஒட்டுமொத்த தோற்றமும் சமநிலையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மணமகன்களுக்கான டிப்ஸ்:

நேவி கலர் அல்லது மரகத பச்சை நிறம், ஐவரி நிறத்திற்கு மாற்றாக இருக்கும்.

தங்கம் அல்லது செம்பு போன்ற அணிகலன்களை தேர்ந்தெடுக்கலாம்.

மணமகளின் ஆடைக்கு ஏற்றவாறு உடையை தேர்வு செய்யலாம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aditi Rao Hydari Siddharth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment