ஜி பே, கூகுள் மேப்ஸ், ஸ்பாட்டிஃபை! நீங்க தினமும் கேட்கிற குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான் – யார் இந்த அதிதி ஷர்மா?

நாம் அனைவரும் பயன்படுத்தும் கூகுள் பே, கூகுள் மேப்ஸ், ஸ்பாட்டிஃபை போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் குரல் விளம்பரங்களில் அதிதி ஷர்மாவின் குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நாம் அனைவரும் பயன்படுத்தும் கூகுள் பே, கூகுள் மேப்ஸ், ஸ்பாட்டிஃபை போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் குரல் விளம்பரங்களில் அதிதி ஷர்மாவின் குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Aditi Sharma

Aditi Sharma

அதிதி ஷர்மாவின் பெயரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவரது குரல் நிச்சயம் உங்களுக்குப் பரிச்சயமானது. காலையில் அலாரமாக ஒலிக்கத் தொடங்கி, அன்றாடப் பயணங்களில் வழிகாட்டியாக, இரவு உறங்கும் முன் ஒரு பாடலைத் தேடிப் பிடிக்க... என நமது ஒவ்வொரு அசைவிலும் அவரது குரல் எங்கோ ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Advertisment

அதிதி ஷர்மா, இந்தியாவின் மிக பிரபலமான குரல் கலைஞர்களில் ஒருவர். விளம்பரங்கள், வானொலி நிகழ்ச்சிகள், அனிமேஷன் திரைப்படங்கள், கார்ட்டூன்கள், மற்றும் பல்வேறு ஆடியோ உள்ளடக்கங்களில் இவரது குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இவரை பலருக்கும் நெருக்கமாக்கியது, தொழில்நுட்பத் தளங்களில் அவரது குரல் பெற்றிருக்கும் இடம் தான்.

'வாய்ஸ் ஆஃப் கூகுள்'     

நாம் அனைவரும் பயன்படுத்தும் கூகுள் பே, கூகுள் மேப்ஸ், ஸ்பாட்டிஃபை போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் குரல் விளம்பரங்களில் அதிதி ஷர்மாவின் குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. "பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது", "இடது புறம் திரும்பவும்", "இசை இப்போது கேட்கிறது..." போன்ற பல குரல் அறிவிப்புகளை நாம் தினமும் கேட்கிறோம். அந்தக் குரல் ஒருவரது தினசரி நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் அதிதி ஷர்மா.

Advertisment
Advertisements

இவரது திறமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் வைரல் வொய்ஸ் ஆஃப் இண்டியா (Behindwoods Viral Voice of India Awards 2024) விருதை அதிதி ஷர்மாவுக்கு வழங்கி கவுரவித்தது.

அதிதி ஷர்மாவின் வெற்றி, குரல் கலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஒரு தொழில்நுட்பம் அல்லது ஒரு பிராண்ட் மக்களுக்கு நெருக்கமாக இருக்க, அதன் குரல் மிகவும் முக்கியம். அந்த முக்கியத்துவத்தை தனது திறமையால் பூர்த்தி செய்து, நம் அனைவரின் தினசரி வாழ்க்கையிலும் தனது குரல் மூலம் நீக்கமற நிறைந்திருக்கிறார் அதிதி ஷர்மா.

அடுத்தமுறை நீங்கள் ஒரு கூகுள் பே பரிவர்த்தனை செய்யும்போது, அல்லது ஒரு புது இடத்தில் பயணிக்க கூகுள் மேப்ஸை பயன்படுத்தும்போது, அந்த குரலின் பின்னணியில் இருக்கும் அற்புதமான கலைஞரை நினைத்துப் பாருங்கள்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: