கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாவிற்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் இடம் வாங்கி கொடுத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார்.
அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் முன்னாள் அமைச்சர் வேலுமணி இரண்டு செண்ட் இடம் வாங்கி கொடுத்தார். பாட்டியின் பெயருக்கு பத்திரபதிவு செய்யப்பட்ட நிலையில், இடத்தின் பத்திரத்தை பாட்டி கமலாத்தாவிடம் எஸ்.பி.வேலுமணி ஒப்படைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“