கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையில் பல குழந்தைகளுக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அப்படி இல்லை. இதுபோன்ற, அவசர காலத்தில், பி.எல்.கே-மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மற்றும் நுரையீரல் சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ரச்னா ஷர்மா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே உதவ என்ன செய்யலாம், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான வழிகாட்டுதல்கள்
- குழந்தையை நல்ல காற்றோட்டம் உள்ள கழிவறையுடன் இணைந்த அறையில் வைத்திருங்கள்.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மற்ற குழந்தைகள் மற்றும் இணைநோயுள்ள நபர்களிடம் இருந்து ஒதுக்கி வையுங்கள்.
- கொரோனா தொற்று பாதித்த குழந்தையை பராமரிக்க ஒரு பிரத்யேக பராமரிப்பாளரை நியமியுங்கள்
- அவர்களை நன்றாக தண்ணீர் குடிக்க வையுங்கள்.
- புதிதாக பிறந்த குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருந்தால், தாய்ப்பால் கொடுத்த பிறகு, தாய் கைகளை நன்றாக சுத்தம் செய்வதை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
- குழந்தைக்கு தேவைப்பட்டால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், பால் பீய்ச்சி பராமரிப்பாளர் வழியாக பால் கொடுக்கலாம்.
- வீட்டில் கூட்டம் கூடுவதையோ அல்லது பார்வையாளர்களையோ அனுமதிக்கக்கூடாது.
- குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் கைத்தறி உடைகள் மற்றும் சாப்பிடும் பாத்திரங்கள் தனியாக வைக்கப்பட வேண்டும்.
பராமரிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்
- எல்லா நேரங்களிலும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு 6-8 மணி நேரத்திற்கு ஒருமுறை முகக்கவசத்தை மாற்ற வேண்டும்.
- கொரோனா வைரஸ் தொறால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உழிழ்நீர், சளி மற்றும் மலம் போன்ற உடல் திரவத்துடன் நேரடி தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
- தொற்று பாதித்த குழந்தையின் உழிழ்நீர், சளி மற்றும் மலம் ஆகிய உடல் திரவங்களை சுத்தம் செய்ய கையுறைகள் மற்றும் முகக்கவசத்தைப் பயன்படுத்துங்கள்.
- தொற்று பாதித்த குழந்தைகள் இருக்கும் அறையில் குழந்தைகள் பயன்படுத்திய கழிப்பறை அல்லது ஃபர்னிச்சர் போன்ற இடங்களை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள். அவற்றை வீட்ட்டில் உள்ள ப்ளீச்சிங் பவுடர் அல்லது 1% ஹைபோகுளோரைட்டைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடைகள், கைத்தறி துணிகள், டவல்களை 60-90 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள சூடான நீரில் வழக்கமான சோப்பு அல்லது வாஷிங் மெஷினைப் பயன்படுத்தி சலவை செய்து சுத்தம் செய்யுங்கள்.
கைகளை சுத்தம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
- கைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை விடாமுயற்சியுடன் அடிக்கடி பின்பற்றுங்கள்.
- கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை அகற்றுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சுத்தம் செய்யுங்கள்.
- சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அழுக்காக தெரியும் கைகளை சுத்தம் செய்யுங்கள்.
- ஆல்கஹால் அடிப்படையிலான ஹேன் சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
- ஈரமான கைகளைத் துடைப்பதற்கு டிஷ்யூ காகித துண்டுகளைப் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், அதற்கு மாற்றாக சுத்தமான துணி டவல்களை பயன்படுத்துங்கள். அவற்றை அடிக்கடி மாற்றுங்கள்.
- கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் பிற குப்பைகளை ஒரு மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில் அப்புறப்படுத்துங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”