/indian-express-tamil/media/media_files/c2YYIxOaI2lOVRAoYxpL.jpg)
Air conditioner
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே வீட்டிலும், அலுவலகத்திலும் குளிர்ச்சியாக இருக்க ஏர் கண்டிஷனர் இன்றியமையாததாக மாறிவிட்டது, மேலும் நாமும் வசதிக்காக அவற்றை அதிகளவில் நம்பியிருக்கிறோம். ஒரு 1.5 டன் ஏசியின் மின்சார நுகர்வு என்னவென்று நீங்கள் யோசிக்கிறீர்களா? ஆச்சரியப்படும் விதமாக, இதன் பதில் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகளைப் பொறுத்தது.
1.5 டன் ஏசியின் மின்சார நுகர்வு என்ன?
1.5 டன் ஏசியின் மின்சார நுகர்வு அதன் ஆற்றல் மதிப்பீட்டை (energy rating) பொறுத்தது. அதிக ஸ்டார் மதிப்பீடுகள் அதிக ஆற்றல் திறனைக் குறிக்கின்றன, அதாவது உங்கள் அறையை குளிர்விக்க ஏசி குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும். உதாரணமாக, 5-ஸ்டார் ஏசி,3- ஸ்டார் ஏசியை விட 28 சதவீதம் வரை குறைவான ஆற்றலைப் பயன்படுத்தலாம். 1-ஸ்டார் ஏசி ஆரம்பத்தில் மலிவாக இருக்கலாம், ஆனால் அதன் அதிக இயக்கச் செலவு (higher operating) ஆரம்ப சேமிப்பை விட அதிகமாக இருக்கலாம். எனவே, அதிக ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்ட ஏசியைத் தேர்ந்தெடுப்பது நீண்ட காலத்திற்கு மிகவும் சிக்கனமானதாக இருக்கும்.
இப்போது, 1.5 டன் ஏர் கண்டிஷனரின் மாதாந்திர மின்சார நுகர்வை எவ்வாறு கணக்கிடுவது?
/indian-express-tamil/media/media_files/1dsqvZJjO2pmvKkOgU5E.jpg)
அதிக ஸ்டார் மதிப்பீடு பொதுவாக சிறந்த ஆற்றல் திறனைக் குறிக்கும். அதே வேளையில், உண்மையான மின்சார பயன்பாடு, தினசரி இயங்கும் நேரம் மற்றும் ஏசியின் திறன் மதிப்பீடு (EER அல்லது COP) போன்ற காரணிகளைப் பொறுத்தது.
உங்களிடம் 1.5 டன் ஏசி இருப்பதாக உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். அதனை இயக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு 2.25 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் 10 மணி நேரம் ஏசியை பயன்படுத்தும் போது ஒரு நாளுக்கு 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
30 நாட்களில் ஒன்றரை டன் ஏசியை இதே கால அளவில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் போது மாதம் 675 யூனிட் மின்சாரம் செலவு செய்யப்படும். அதன்படி தமிழ்நாட்டில், 675 யூனிட் மாதம் ஒன்றுக்கு செலவு செய்யும் போது சுமார் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரைக்கும் கூடுதல் பில் வர வாய்ப்புள்ளது.
ஏசி மின்சார நுகர்வை பாதிக்கும் காரணிகள் யாவை?
உங்கள் ஏர் கண்டிஷனரின் அளவு (டன்னேஜ்) மற்றும் அதன் ஆற்றல் மதிப்பீடு ஆகிய இரண்டையும் பொறுத்து, ஏசி மின்சார நுகர்வை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.
அவற்றில் சில பொதுவானவை இங்கே:
ஒரு அறையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை ஏசி மின்சார நுகர்வை பாதிக்கிறது. உதாரணமாக - 20-25 பேர் கொண்ட ஒரு அறைக்கு பல ஏசிகள் தேவைப்படலாம், அதே நேரத்தில் 3-5 பேர் கொண்ட ஒரு அறைக்கு அறையை குளிர்விக்க ஒரு ஏசி போதுமானது.
/indian-express-tamil/media/media_files/VUblWNUVpUB7NIUkiXZ3.jpg)
அறையின் அளவு, ஏசி மின்சார நுகர்வைப் பொறுத்தவரை முக்கிய பங்கு வகிக்கிறது. அறை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு அதிகமாக ஏசி மின்சார நுகர்வு இருக்கும். அதேபோல், சிறிய அறைகள் குளிர்விக்க குறைவான மின்சாரத்தை உட்கொள்ளும்.
அறைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வெப்பநிலை ஏசி மின்சார நுகர்வை பாதிக்கிறது. வெளியில் வெப்பநிலை 35 டிகிரிக்கு அதிகமாக இருந்தால், அறையை குளிர்விக்க ஏசிக்கு அதிக மின்சாரம் தேவைப்படும்.
அறைக்குள் அதிக மின்சாதனப் பொருட்கள் இருந்தால் அதிக வெப்பம் உருவாகும், இது இறுதியில் அறையை குளிர்விக்க ஏசியின் மின்சார நுகர்வை அதிகரிக்கும்.
5-ஸ்டார் மதிப்பீடு பெற்ற ஏசி ஆற்றலைச் சேமிக்க உதவுகிறது. ஜன்னல் ஏசி, இன்வெர்ட்டர் ஏசி, ஸ்பிளிட் ஏசி அல்லது சென்ட்ரல் ஏசி போன்ற ஏசியின் தேர்வும் ஏசி மின்சார நுகர்வை பாதிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us