Advertisment

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் 'பிளேடு': கூர்மையான பொருட்களை விழுங்குவதால் ஏற்படும் அபாயங்கள்

விசாரணைக்குப் பிறகு, இது எங்கள் கேட்டரிங் பார்ட்னரின் வசதிகளில் பயன்படுத்தப்படும் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்திலிருந்து வந்தது என அடையாளம் காணப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Air India passenger finds blade

Air India passenger finds ‘blade’ in food served during flight

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஏர் இந்தியா உணவுகள் கத்தியைப் போல வெட்டக்கூடியவை. அதன் வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திப்பழ சாட்டில், பிளேடு போல ஒரு உலோகத் துண்டு இருந்தது. சில வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உணர்வு வந்தது. அதிர்ஷ்டவசமாக, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை”.

Advertisment

ஏர் இந்தியா பெங்களூர்-சான் பிரான்சிஸ்கோ விமானத்தில் பயணம் செய்த மாதுர்ஸ் பால் X பதிவு தான் இது.

இதைத் தொடர்ந்து விமான நிறுவனம், விரைவாக விசாரணையைத் தொடங்கியது.

எங்கள் விமானம் ஒன்றில் விருந்தினரின் உணவில், பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது, விசாரணைக்குப் பிறகு, இது எங்கள் கேட்டரிங் பார்ட்னரின் வசதிகளில் பயன்படுத்தப்படும் வெஜிடபிள் பிராசஸிங் மெஷினில் இருந்து வந்தது என அடையாளம் காணப்பட்டது, என்று ஏர் இந்தியாவின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி ராஜேஷ் டோக்ரா ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

இத்தகைய நிகழ்வுகள் அரிதானவை என்றாலும், தற்செயலாக இந்த பொருட்களை உட்கொண்டால், இவை மனித உடலில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பிளேடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், கடுமையான உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சேவைகள் கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றினாலும், பல்வேறு காரணிகளால் குறைபாடுகள் ஏற்படலாம், என்று டாக்டர் பிரணவ் ஹொன்னவரா சீனிவாசன் கூறினார். (senior consultant surgical gastroenterologist at Fortis Hospitals Bengaluru)

இதுபோன்ற சூழ்நிலைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அறிந்து கொள்வதும் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.

அறிகுறிகள்

பிளேடு, கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உட்கொள்வது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்துகிறது.

கூர்மையான பொருள்கள் வாய், தொண்டை, உணவுக்குழாய் அல்லது இரைப்பைக் குழாயில் சிதைவுகளை ஏற்படுத்தும், இது ரத்தப்போக்கு, தொற்றுநோய்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும், என்று டாக்டர் சீனிவாசன் விரிவாகக் கூறுகிறார்.

மறுபுறம், பிளாஸ்டிக்கை உட்கொள்வது மூச்சுத் திணறல், செரிமானப் பாதையில் அடைப்புகள் அல்லது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடலாம்.

தொண்டை அல்லது அடிவயிற்றில் கடுமையான வலி, விழுங்குவதில் அல்லது சுவாசிப்பதில் சிரமம், வாந்தி (குறிப்பாக ரத்தம் இருந்தால்) மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் அல்லது உப்பிசம் ஆகியவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும். 

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

நீங்கள் வேறு ஏதேனும் பொருளை உட்கொண்டதாக சந்தேகம் இருந்தால், டாக்டர் சீனிவாசனின் பரிந்துரைகளைப் பின்பற்றவும். அருகிலுள்ள அவசர அறைக்குச் செல்லவும் அல்லது சுகாதார நிபுணரை தொடர்பு கொள்ளவும்.

வாந்தியைத் தூண்ட முயற்சிக்காதீர்கள், இது அதிக தீங்கு விளைவிக்கும், குறிப்பாக பொருள் கூர்மையாக இருந்தால்.

ஒரு மருத்துவ நிபுணர் உங்களுக்கு அறிவுறுத்தும் வரை அமைதியாக இருங்கள். சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்க்கவும்.

Read in English: Air India passenger finds ‘blade’ in food served during flight: Risks from swallowing foreign objects, immediate steps to take

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment