விமானப் பாதுகாப்பில் இது ஒரு முக்கிய அம்சம்: அவசரகால வெளியேற்றக் கதவுகளை எப்போது, யார் திறக்கலாம்?

விமான அவசர வழிகள் என்பவை வெறும் கதவுகள் அல்ல, அவை ஒரு அவசர சூழ்நிலையில் உயிர்காக்கும் வாய்ப்பு.

விமான அவசர வழிகள் என்பவை வெறும் கதவுகள் அல்ல, அவை ஒரு அவசர சூழ்நிலையில் உயிர்காக்கும் வாய்ப்பு.

author-image
WebDesk
New Update
Aircraft emergency exits

Aircraft emergency exits Safety regulations

விமானத்தில் பயணிக்கும்போது, அவசரகால வெளியேற்றக் கதவுகள் (emergency exits) எப்போது, யாரால் திறக்கப்படலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் இருக்கலாம். விமானப் பாதுகாப்பில் இது ஒரு முக்கிய அம்சம் என்பதால், இது குறித்த தெளிவான புரிதல் அவசியம்.

Advertisment

அவசரகால வெளியேற்றக் கதவுகள் - ஒரு பார்வை

விமானத்தின் அளவு மற்றும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவசரகால வெளியேற்றக் கதவுகளின் எண்ணிக்கை மாறுபடும். பெரிய விமானங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் பல கதவுகள் இருக்கும், அதேசமயம் சிறிய விமானங்களில் சில மட்டுமே இருக்கலாம். விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க இந்த கதவுகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள் தீர்மானிக்கப்படுகின்றன. விபத்து அல்லது தீ விபத்து போன்ற தீவிர சூழ்நிலைகளிலும் செயல்படும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சில கதவுகளில், விரைவான வெளியேற்றத்திற்கு உதவும் சறுக்குதல் (slide deployment) அமைப்புகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

எப்போது கதவுகளைத் திறக்க அனுமதிக்கப்படுவார்கள்?

Advertisment
Advertisements

விமானப் போக்குவரத்து நிபுணர் மற்றும் ஆய்வாளர் தயாஸ்ரீல் வந்தேகர் இதைத் தெளிவாக விளக்குகிறார்: "அவசரகால வெளியேற்றக் கதவுகளை பயணிகள், அவசரகால வெளியேற்றத்தின் போது, விமானப் பணிக்குழுவினர் (cabin crew) அறிவுறுத்தினால் மட்டுமே திறக்க முடியும். பயணிகள் வெளியேறும் இடத்தையும், அதை இயக்குவதற்கான வழிமுறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கதவுகளைத் திறப்பதற்கும், வெளியேறுவதற்கும் விமானப் பணிக்குழுவினரின் வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்."

Vistara flight operations disrupted

இதன் பொருள், பயணிகள் தாங்களாகவே முடிவெடுத்து இந்தக் கதவுகளைத் திறக்க அனுமதி இல்லை என்பதே. எந்தவொரு அவசர காலத்திலும், பணிக்குழுவினரின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.

பயணிகளுக்கு வழங்கப்படும் முக்கிய அறிவுறுத்தல்கள்

விமானப் பயணத்தின்போது வழங்கப்படும் பாதுகாப்பு விளக்கங்களுக்கு (safety briefing) பயணிகள் முழு கவனம் செலுத்துவது மிக அவசியம். அவசரகால வெளியேற்றக் கதவுகளின் இருப்பிடம், அவற்றை இயக்கும் முறை மற்றும் அதற்கான குறிப்பிட்ட வழிமுறைகள் அனைத்தையும் தெரிந்துகொள்வது, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும்.

மேலும், அவசரகால வெளியேற்றக் கதவுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு, விமானப் பணிக்குழுவினர் தனிப்பட்ட முறையில் அந்தக் கதவை இயக்குவது குறித்த விளக்கங்களை வழங்குவார்கள். ஒருவேளை அவசர காலத்தில் பணிக்குழுவினர் உதவ முடியாத சூழல் ஏற்பட்டால், இந்த பயணிகள் கதவுகளை இயக்க தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு இருக்கையிலும் படங்களுடன் கூடிய பாதுகாப்பு விளக்க அட்டை (passenger safety briefing card) வைக்கப்பட்டுள்ளது. இது வாய்வழி விளக்கங்களுக்குத் துணையாக, அவசரகால வெளியேற்றக் கதவுகளை எப்போது, எப்படி இயக்குவது என்பதை விளக்குகிறது.

விமானப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. விமானப் பணிக்குழுவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலமும், பாதுகாப்பு வழிமுறைகளைத் தெரிந்துகொள்வதன் மூலமும், ஒரு பாதுகாப்பான பயணத்திற்கு நாமும் பங்களிக்க முடியும்.

Read in English: In what situations are passengers permitted to open emergency exits on flights?

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: