ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல், கிட்டத்தட்ட 2,000 விமான நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சங்கம், 2022 ஆம் ஆண்டில் உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது.
Advertisment
ஒரு பத்திரிகை அறிக்கையில், சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்குவதன் மூலம் 2022 இல் உலகளாவிய பயணிகள் போக்குவரத்து 7 பில்லியனை எட்டியது என்று பகிர்ந்து கொண்டது.
2019 ஆம் ஆண்டின் முடிவுகளின்படி இந்த எண்ணிக்கை 73.8 சதவீத மீட்சியைக் குறிக்கிறது என்றாலும், கொரோனா தொற்றுநோயால் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பயணிகள் போக்குவரத்து, 92 சதவீதத்தை எட்டும் என்று ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் மேலும் எதிர்பார்க்கிறது.
Advertisment
Advertisement
2022 தரவரிசையின்படி, ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் (Hartsfield-Jackson Atlanta International Airport 93.7 மில்லியன் பயணிகளுடன் ஒட்டுமொத்தமாக பரபரப்பான விமான நிலையமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து Dallas/Fort Worth TX மற்றும் Denver விமான நிலையங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களில், ஐந்து விமான நிலையங்கள் அமெரிக்காவில் இருந்தன. இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய விமான நிலையம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பல ஆண்டுகளில் முதல் முறையாக, சீனாவில் எந்த விமான நிலையமும் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
சர்வதேச சந்தைகளில், நிச்சயமாக, மீட்பின் அடிப்படையில் நாங்கள் இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுகிறோம், என்று ஏசிஐ வேர்ல்டின் தலைமை இயக்குனர் லூயிஸ் பெலிப் டி ஒலிவேரா, சி.என்.என் டிராவலிடம் கூறினார்.
ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல், உலகின் பரபரப்பான சர்வதேச மையங்களின் பட்டியலை (world’s busiest international hubs) வெளியிட்டது, இதில் துபாய் இன்டர்நேஷனல் (DXB) தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இது 66.06 மில்லியன் பயணிகளைப் பெற்றது, இது 2021 ஆம் ஆண்டை விட 127% அதிகமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“