மாதாமாதம் ரீசார்ஜ் பண்ணி அலுத்து விட்டீர்களா?.. ஜியோ, ஏர்டெல், வோடபோனின் வருடாந்திர திட்டங்களை முயற்சித்து பாருங்களேன்
ஒவ்வொரு மாதமும் உங்கள் கைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்வது ஒரு பணி. சில நேரங்களில் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கடைசி தேதியை மறந்து விட்டு, மீதமுள்ள தொகையை இழந்திருக்கலாம்
ஒவ்வொரு மாதமும் உங்கள் கைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்வது ஒரு பணி. சில நேரங்களில் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கடைசி தேதியை மறந்து விட்டு, மீதமுள்ள தொகையை இழந்திருக்கலாம்
airtel, vodafone, reliance jio, monthly recharge, annual plans, talktime, ulimited internet, sms, jio, reliance jio, jio news in tamil, airtel news in tamil, vodafone news in tamil
ஒவ்வொரு மாதமும் உங்கள் கைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்வது ஒரு பணி. சில நேரங்களில் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கடைசி தேதியை மறந்து விட்டு, மீதமுள்ள தொகையை இழந்திருக்கலாம். சில நேரங்களில் ப்ரீபெய்ட் பாக் இன்னும் சிறிது காலம் நீடித்திருக்கலாமே என்ற தோன்றியிருக்கலாம். ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்யாத நபர்களுக்கு இது இன்னும் சலிப்பூட்டுவதாக இருந்திருக்கலாம்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எனவே 28 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்வது கஷ்டமாக உள்ள மக்களுக்காக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை சில கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் சிறந்த டேட்டா நன்மைகளை தரும் மேலும் நீங்கள் உங்கள் கைபேசியை அழைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த விரும்பினால் இந்த திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும்.
Advertisment
Advertisements
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ இரண்டு கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை அதிகம் அழைப்புகளை செய்யும் பயனர்களுக்காக வழங்குகிறது. ஒன்று மாதாந்திர திட்டம் மற்றொன்று வருடாந்திர திட்டம். மாதாந்திர திட்டம் ரூபாய் 129/- க்கும், வருடாந்திர திட்டம் ரூபாய்.1,299/- என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர 129 திட்டத்தில் மொத்தமாக 2GB டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது, மேலும் இந்த பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதே சமயம் 1299 க்கான வருடாந்திர திட்டத்தில் 24GB டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
வோடபோன்
வோடபோனும் இதுபோன்ற மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டத்தை ரூபாய் 129/- மற்றும் ரூபாய் 1,499/- க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 129 ரூபாய் மாதாந்திர திட்டத்தில் 2GB டேட்டா மற்றும் அளவில்லாத இலவச அழைப்பு செய்யும் வசதியும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூபாய் 1,499/- க்கான வருடாந்திர திட்டத்தில் 24GB டேட்டா அளவில்லாத இலவச அழைப்புகள் மற்றும் Zee5 மற்றும் Vodafone Play ஆப்ப்களுக்கு இலவச சந்தா நன்மைகளும் உள்ளன. இந்த திட்டத்தின் வெலிடிட்டி 365 நாட்கள்.
ஏர்டெல்
இந்த குறிப்பிட்ட பிரிவில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஆகியவற்றை விட அதிகமான திட்டங்களை வழங்குகிறது. ரூபாய்.149/- மற்றும் ரூபாய்.179/- ஆகிய இரண்டு மாதாந்திர திட்டங்களையும், ரூபாய்.1498/- க்கு வருடாந்திர திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டங்கள் சிறந்த அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன.
ரூபாய்.149/- க்கான மாதாந்திர திட்டத்தில் 2GB டேட்டா, 300 குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவில்லா இலவச அழைப்புகள் வசதியும் உள்ளது. ரூபாய் 179/- திட்டத்தில் இதில் உள்ள எல்லா நன்மைகளும் உள்ளன, மேலும் ரூபாய் 2 லட்சத்துக்கான Bharti Axa ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பும் கூடுதலாக உள்ளது. ரூபாய் 1498/- க்கான ஏர்டெல் வருடாந்திர திட்டத்தில் 24GB டேட்டா, 3600 குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் அளவில்லா அழைப்பு செய்யும் வசதி மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil