/tamil-ie/media/media_files/uploads/2019/10/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills.jpg)
aishwarya rai age
aishwarya rai age : அழகியே... ஐஸ்வர்யா ராயின் அழகை பற்றி பேசிட ஒருநாள் போதாது. 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்று இந்தியாவை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய் 45 வயதிலும் தன்னுடைய அழகிலும், ஃபேஷனிலும், ஸ்டைலிலும் தனி கவனம் செலுத்தி முன்னணி இளம் நடிகைகளையும் திக் முக்காட வைக்கிறார். ஒரு குழந்தைக்கு தாயான பின்பு ஐஸ்வர்யாவின் அழகில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவரின் உணவு பழக்கம் தொடங்கி அவர் மீது அவை வைத்திருக்கும் நம்பிக்கை.
திருமணத்திற்கு பின்பும் பாலிவுட் திரையுலகில் பல இயக்குனர்களும் தேடி சென்று கதை சொல்லி வரும் ஒரு நடிகை என்றால் அதுவும் ஐஸ்வர்யா ராய். இதுவரை இந்தியாவை சேர்ந்த பலரும் உலக அழகி பட்டம் வென்ற போதிலும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த அந்த ஒரு பெருமை, புகழ், ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்தியாவின் முன்னாள் உலக அழகி என்றால் குழந்தைகள் முதல் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வரும் பெயர் ஐஸ்வர்யா ராய்.
சில தினங்களுக்கு முன்பு பாரீஸ் பேஷன் வீக் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைப்பெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது செல்ல மகளுடன் கலந்துக் கொண்டார். தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாடல் அழகிகளும், ஹாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் 2 தினங்களுக்கு முன்பு இந்த ஃபேஷன் ஷோவில் நடிகை ஐஸ்வர்யா அணிந்து வந்த ஆடை, அவரின் ஸ்ட்டைல் போஸ்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்
பார்ப்பவர்களையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறது. 46 வயதாகும் ஐஸ்வர்யா ராயின், பாரீஸ் பேஷன் ரெட் கார்ப்பட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, ட்விட்டரில் உலக டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.