அழகு என்றால் அவள் தானா! ஒவ்வொரு ஆண்டும் ஐஸ்வர்யா ராய் கொண்டாடிய பிறந்த நாள் ஃபோட்டோஸ்

அந்த ஒரு பெருமை, புகழ், ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடைக்கவில்ல என்றே கூறலாம்.

By: Updated: November 1, 2019, 11:28:17 AM

aishwarya rai age and birthday : ஐஸ்வர்யா ராயின் அழகை பற்றி பேசிட ஒருநாள் போதுமா என்ன? இப்போது வரை உங்களுக்கு தெரிந்த உலக அழகியின் பெயரை சொல்லுங்கள் என்றால் நம் அனைவர் மனதிலும் வரும் முதல் முகம் மற்றும் பெயர் ஐஸ்வர்யா ராய் தான்.

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்று இந்தியாவை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய் 45 வயதிலும் தன்னுடைய அழகிலும், ஃபேஷனிலும், ஸ்டைலிலும் தனி கவனம் செலுத்தி முன்னணி இளம் நடிகைகளையும் திக் முக்காட வைக்கிறார். ஒரு குழந்தைக்கு தாயான பின்பு ஐஸ்வர்யாவின் அழகில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவரின் உணவு பழக்கம் தொடங்கி அவர் மீது அவை வைத்திருக்கும் நம்பிக்கை.

திருமணத்திற்கு பின்பும் பாலிவுட் திரையுலகில் பல இயக்குனர்களும் தேடி சென்று கதை சொல்லி வரும் ஒரு நடிகை என்றால் அதுவும் ஐஸ்வர்யா ராய். இதுவரை இந்தியாவை சேர்ந்த பலரும் உலக அழகி பட்டம் வென்ற போதிலும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த அந்த ஒரு பெருமை, புகழ், ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடைக்கவில்ல என்றே கூறலாம்.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த சோஷியல் மீடியாக்கள் பக்கமும் வராத ஐஸ்வர்யா ராய், கட்ந்த ஆண்டு தான் இன்ம்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையை எட்டி காண்பித்தார். காரணம், அவர் மீது வரும் எதிர்மறையான விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள தயாராக இருந்ததில்லை.

அதன் காரணமாக ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் இவை எல்லாவற்றையும் அவர் தவிர்த்தார். ஐஸ்வர்யா ராயின் எல்லா பிறந்த நாளும் வித்யாசமாக கொண்டாடப்படும். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் வெளிநாட்டிலே ஐஸ்வர்யா ராய் கொண்டாட தொடங்கினார். இந்த புகைப்படங்கள் கூட லேட்டாக தான் இணையத்தில் வரும்.

இந்த வகையில் ஐஸ்வர்யா ராய் இன்று தனது 46 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரின் ப்ர்தெடே ஸ்பெஷலாக இதுவரை அவர் கொண்டாடிய பிறந்த நாள் புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.

45 வயதில் பிறந்த நாள் கொண்டாட்டம் 41 ஆவது வயதில் ஐஸ்வர்யா கொண்டாடிய பிறந்த நாள் 35 வயதில் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராயின் 43 ஆவது பிறந்த நாள்

 

39 வயதில் ஐஸ்வர்யா ராய் கொண்டாடிய பிறந்த நாள்

 

25 வயதில் குழந்தைகளுடன் ஐஸ்வர்யா ராய் கொண்டாடிய பிறந்தநாள்

 

40 வயதில் ஐஸ்வர்யா ராய்

இந்த அனைத்தும் புகைப்படங்களையும் பார்க்கும் போது  ஐஸ்வர்யா அழகில், சிரிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. அதனால் தான் அழகு என்றால் ஐஸ்வர்யா ராய் நன் நினைவுக்கு வருகிறார்.

 

photo credits :  original uploader

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Aishwarya rai age and birthday aishwarya rai bachchan birthday photos aishwarya rai photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X