ஆளும் கேன்ஸ் ராணி ஐஸ்வர்யா ராய் பச்சன் பிரெஞ்சு ரிவியராவில் 21வது முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டார்.
வியாழன் அன்று பிரபலமான சிவப்பு கம்பளத்தின் மீது, சோஃபி கோச்சரின் கவுனில் வந்த அழகி ஒப்பிடமுடியாத நேர்த்தியின் உருவகமாக இருந்தார்.
49 வயதான அழகி லைட்வெயிட் அலுமினியம் டீடெய்யில் உடன் பளபளக்கும் சில்வர் கவுனை அணிந்திருந்தார். அதில் எப்போதும் போல சிவப்பு கம்பளத்துக்கு உரிய லாங் ஃபிளெர்ட் ட்ரேயில் உடன் ஒரு மிஸ்டிக்கல் ஹூட் இணைக்கப்பட்டு இருந்தது.

இது பிராண்டின் சிக்னேட்சர் கொண்ட கருப்பு நிற கோர்செட்டுடன் வந்தது, இடுப்பில் பெரிய கருப்பு நிற பெள இருந்தது.
இன்ஸ்டாகிராமில் இந்த உடையை பற்றிய எழுதிய Sophie Couture, எங்கள் வடிவமைப்பாளர் குணேல் பாபயேவா, தனது யோசனைகளால் தன்னை சவால் செய்வதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. இந்த நேரத்தில், அவர் ஒரு சிக்கலான யோசனையை எடுத்தார். ஒரு ஆடையில் வசதியையும் அழகையும் எவ்வாறு இணைப்பது, முதலில் சாத்தியமற்றதாகத் தோன்றிய ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை தான், இறுதியில் மிஸ்டிகல் ஹூட் உருவாக்க வழிவகுத்தது.

ஸ்ட்ரெயிட் ஹேர், டிஃபைண்ட் ஐ பிரோஸ், ஃபிளஷ்டு சீக்ஸ், பிளாக் கேட் ஐ லைனர், பிரகாசமான சிவப்பு லிப்ஸ்டிக் உடன் ஐஸ்வர்யா ஆடைக்கு கூடுதல் அழகை சேர்த்தார்.
விழாவில் தோன்றுவதற்கு முன்பு, ஐஸ்வர்யா ஒரு அழகான வைபிரேண்ட் கிளிட்டரிங் பச்சை நிற வாலண்டினோ உடையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். கணுக்கால் வரை பாய்ந்தோடிய இந்த ஆடையில் பிளிடட் பாடிஸ், கேப் ஸ்லீவ்ஸ் இருந்தது.
அனைத்து அணிகலன்களையும் விட்டு, ஃபிரீ ஹேர், க்ளாஸி லிப் கலர், ஷிம்மரி கிரீன் ஐ ஷெடோ, பிளாக் ஐ லைனர், மற்றும் பிளஷ்டு சீக்ஸ் தோற்றத்துடன் ஐஸ்வர்யா ஈர்த்தார்.

இருப்பினும், அவரது தோற்றம் நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒருவர் எழுதுகையில், “இந்த தோற்றத்தை மிகவும் விரும்பினேன்!! அவள் முயற்சித்த எல்லா தோற்றங்களிலிருந்தும் இது மிகவும் வித்தியாசமானது!! என்றார்.
மற்றொரு நெட்டிசன், ஐஸ்வர்யா ராய் கேன்ஸில் உடையை விட பொன்னியின் செல்வனில் மிகவும் அழகாக இருந்தார், என்று கூறினார்.
ஐஸ்வர்யாவின் கேன்ஸ் 2023 தோற்றங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“