தனது கிளாமரஸ் கேன்ஸ் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த பிறகு, ஐஸ்வர்யா ராய் இப்போது ரெட் கார்பெட்டுக்கு தயாராகும் பிஹைன்ட் தி சீன்ஸ் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்ததன் மூலம், மீண்டும் இணையத்தில் புயலைக் கிளப்பினார்.
சமீபத்தில் இருந்து மும்பை திரும்பிய ஐஸ்வர்யா, புதிய படங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
ஐஸ்வர்யாவின் கேன்ஸ் பயணத்தின் சிறப்பம்சமாக அவரது வசீகரிக்கும் ரெட் கார்பெட் தோற்றம் இருந்தது.
/indian-express-tamil/media/media_files/P6Ov9W4CcTFzqph1AtrE.jpg)
/indian-express-tamil/media/media_files/n8x73O6CBZ1Ge62C2BP6.jpg)
ஃபால்குனி, ஷேன் பீகாக் வடிவமைத்த ஸ்டன்னிங் பிளாக் மற்றும் கோல்டு ஸ்ட்ராப்லெஸ் கவுன் முதல் டிராமட்டிக் ப்ளூவுடன் சில்வர் கிரியேஷன் வரை, தனது மாசற்ற ஃபேஷன் உணர்வை ஐஸ்வர்யா இதில், வெளிப்படுத்தினார். இது பேஷன் ஆர்வலர்களின் பாராட்டை பெற்றது.
/indian-express-tamil/media/media_files/cbtsn130vNTwJmvAWS2p.jpg)
கேன்ஸ் திரைப்பட விழாவுடனான அவரது தொடர்பு 2002 இல் அறிமுகமானது, தேவதாஸ் படத்தின் முதல் காட்சிக்காக ஷாருக்கான் மற்றும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் தேரில் வந்த அந்த தருணம் பாலிவுட் வரலாற்றில் பொறிக்கப்பட்டது.
அப்போதிருந்து, ஐஸ்வர்யா தனது வசீகரத்தால் பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து, 'கேன்ஸ் குயின்' என்ற பட்டத்தை பெற்றார்.
/indian-express-tamil/media/media_files/pAzNcsWJVGsNqzY5diUu.jpg)
பல ஆண்டுகளாக, ஐஸ்வர்யா ரெட் கார்பெட்டை அலங்கரித்தது மட்டுமல்லாமல், ஒரு நடுவராகவும் இருந்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டில், கேன்ஸ் ஜூரி உறுப்பினராக, கிரின் சாரீ, யெல்லோ ஹெவிலி எம்பிராய்டரி பிளவுஸுடன் ஐஸ்வர்யா வெவ்வேறு இந்திய ஆடைகளில் தோன்றினார்.
/indian-express-tamil/media/media_files/9apC5M2nICM84hvOEgWf.jpg)
அவளுடைய பர்பிள் லிப்ஸ்டிக் நினைவிருக்கிறதா?
/indian-express-tamil/media/media_files/STnqwuKxHMsdBPaagmb6.jpg)
கடந்த ஆண்டு, ஐஸ்வர்யா ஐஸ்வர்யா ரெட் கார்பெட்டில் ஜயன்ட் சில்வர் ஹூட் கவுனில் நடந்தார். இந்த ஃபுளோர் ஸ்வீபிங் கவுன் ஆயிரக்கணக்கான அழகான அலுமினிய பைலெட்ஸ் மற்றும் கிரிஸ்டல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Read In English: Aishwarya Rai shares stunning BTS photos as she prepared for Cannes red carpet, fans call her ‘the most beautiful’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“