/indian-express-tamil/media/media_files/2025/08/29/ar-2025-08-29-14-20-43.jpg)
Aishwarya Rai Bachchan
திரையுலகின் பேரரசி, உலக அழகி, இந்திய சினிமாவின் பொக்கிஷம்... ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே கண்முன் வருவது அவரது வசீகரமான நீல நிறக் கண்கள், பளபளக்கும் சருமம், மற்றும் புன்னகை பூக்கும் உதடுகள். உலக அழகி பட்டம் வென்றது முதல், இன்று வரை அவரது அழகு, கலை மற்றும் தன்னம்பிக்கை ஒருபோதும் மங்கவில்லை.
2007-ம் ஆண்டு, பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். ஒரு காலத்தில், மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றபோது, ஐஸ்வர்யா ராயின் பேரழகு உலகையே வியக்க வைத்தது. இன்றும், 50 வயதைக் கடந்த நிலையிலும், அதே பொலிவு, அதே புன்னகை என அவர் அழகு சிறிதும் குறைவதில்லை.
எந்திரன் பட ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகை ரேவதி சங்கரன் சே ஸ்வாக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
”ஒரு நாள் எந்திரன் பட ஷூட்டிங்ல ஐஸ்வர்யா ராயை சந்திச்சேன். அப்போ அவங்க என் கிட்ட, "உங்க ஸ்கின் ரொம்ப அழகா இருக்கு"னு சொன்னாங்க. அத கேட்ட உடனே எனக்கு கொஞ்சம் ஆச்சரியமா இருந்துச்சு.
நான் அவங்ககிட்ட, "ஐஸ்வர்யா, நீங்க எவ்வளவு அழகு, நீங்களே இப்படி சொல்லலாமா”னு சொன்னேன். அதுக்கு அவங்க, "எனக்கு தெரியல மா, உங்க வயசுல நான் எப்படி இருப்பேன்னு"னு ரொம்ப பணிவா சொன்னாங்க. என்கிட்ட நல்லா பேசிட்டு இருப்பாங்க. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்ககிட்ட இருந்து என் கண்ணு எடுக்கவே முடியலனு சொல்லுவேன். அதுக்கு அவங்க என்ன அழகு அம்மானு சொல்லுவாங்க” என ரேவதி தன் நினைவுகளை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
இந்திய சினிமா மற்றும் உலக அழகின் வரலாற்றில், ஐஸ்வர்யா ராய் ஒரு தனித்துவமான அத்தியாயம். அவரது அழகு, கலை மற்றும் ஆளுமை என்றென்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.