அமரர் கல்கி கிருஷ்ண மூர்த்தி எழுதிய வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். இந்தப் புத்தகம், மாமன்னர் ராஜ ராஜ சோழன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வந்திய தேவன், பழுவேட்டையர்கள் என சோழர் வரலாற்றை கண்முன்னே நிறுத்தும்.
பலரும் திரைப்படமாக்க எண்ணி தோற்றுப் போன இந்தக் காவியத்தை மணிரத்னம் படமாக எடுத்தார். படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ரூ.400 கோடிக்கு மேல் வசூலிலும் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்.28ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் பிரியாவிடை நிகழ்வு விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசும் போது கண்கலங்கினார்.
அப்போது அருகில் இருந்த ஐஸ்வர்யா ராய் அவரை தேற்றினார். பொன்னியின் செல்வனில் கார்த்தி வந்தியதேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் பெரிய பழுவேட்டையர் (சரத் குமார்) மனைவியாகவும் நடித்துள்ளார்.
மேலும், படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, த்ரிஷா கிருஷ்ணன், சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, பிரபு மகன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“