Advertisment

உடல் எடை குறித்து தொடர் உருவக் கேலி; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஐஷ்வர்யா ராய்

பிரசவத்திற்கு பிறகு தான் தொடர்ந்து சந்தித்து வந்த உருவக் கேலிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஷ்வர்யா ராய் பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
aishwarya rai

தனது அழகு மற்றும் திறமையால் திரைத்துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர் ஐஷ்வர்யா ராய். கடந்த 2011-ஆம் ஆண்டு ஐஷ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது முதல் உடல் ரீதியான மாற்றங்களால் ஐஷ்வர்யா ராய் தொடர்ந்து உருவக் கேலிக்கு ஆளாகி வருகிறார்.

Advertisment

குறிப்பாக பிரசவத்திற்கு பின்னர், ஐஷ்வர்யா ராய் உடல் எடை அதிகரித்து விட்டதாக விமர்சனத்துக்குள்ளானார். சர்வதேச ஊடகத்துடனான நேர்காணலின் போது, பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு ஐஷ்வர்யா ராய் எப்போது திட்டமிட்டுள்ளார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு அவர் பதிலளித்தார் என்று சொல்வதை விட பதிலடி கொடுத்தார் என்றே கூறலாம்.

குறிப்பாக, அதிக கவனம் அளிக்கக் கூடிய விஷயம் இதுவல்ல என ஐஷ்வர்யா ராய் கூறினார். மேலும், உடல் எடை அதிகரிப்பு என்பது தனக்கு இயற்கையாக நிகழ்ந்ததாகவும், அதில் அவர் சௌகரியமாக உணர்வதாகவும் விளக்கமளித்துள்ளார்.

உடல் எடை அதிகரித்த போதிலும் தான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கவில்லை எனவும், தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது உடல் எடை குறித்து தான் அக்கறை கொண்டிருந்தால், அதை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பேன் எனக் கூறிய ஐஷ்வர்யா ராய், ஆனால் தான் அவ்வாறு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் நேரத்தில், ஐஷ்வர்யா ராய் தனது சொந்த வாழ்க்கை மற்றும் தனது குழந்தையிடம் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisement

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment