அஜித் தந்த அட்வைசால் கல்லூரி மாணவர்கள் வென்ற பரிசு!.. பிரமிக்க வைத்த சாதனை

அஜித் இந்த பயிற்சிக்காக வாங்கிய தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே.

தல அஜித்தின் ஆலோசனையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் புதிய சாதனை படைத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

சென்ற இடமெல்லாமல் சிறப்பை அள்ளிக் கொண்டிருக்கிறார் தல அஜித். நடிப்பது மட்டுமல்லாமல் நிஜ உலகில் ரேசர், பைலட், கார் மற்றும் விமான வடிவமைப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ள நடிகர் அஜித் பல ட்ரான் ஹெலிகாப்டரை வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இந்நிலையில் தான் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் சோதனை பைலட்டாகவும் ஆலோசகராகவும் அஜித் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

இதற்காக டீம் தக்‌ஷா எனும் பெயரில் புதிய மாணவர் குழுவை உருவாக்கினார்கள் அதில் அஜித் முக்கிய ஆலோசகராக செயல்பட்டார். அஜித் தலைமையில் இயங்கிய இந்த மாணவர்கள் குழு ட்ரோன் ஹெலிகாப்டரை ஒன்றை உருவாக்கினார்கள். இந்த ட்ரோன் தான் தற்போது இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த போட்டியில் இந்த தக்‌ஷா ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடம் வானத்தில் பறந்து உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் என புதிய சாதனையை செய்துள்ளது. இதில் ட்ரோனின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், பெட்ரோல் மூலம் எரிசக்தி மின்சாரமாக மாற்றப்படுவதால் அதிக நேரம் இயங்குகிறது, மேலும் ரிமோட் மூலம் இல்லாமல் கணிணி மூலம் இதனை இயக்குவதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கூட தெளிவாக அளவிட்டு நிலைநிறுத்த முடியும்.

இந்த ட்ரோன் மூலம் 10 கிலோ வரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இதை பயன்படுத்தி மருந்து உதவிகளை மேற்கொள்ள முடியுமா என்று தல அஜித் உள்பட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.இந்த ஆளில்லா விமானம் தயாரிப்பதில் அஜித்திற்கு இருக்கும் அறிவை வைத்து உலக அளவிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடியும் என்று பேராசிரியர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.

அதே போல் அஜித்தின் வழிக்காட்டுதலில் கல்லூரி மாணவர்கள் செய்த இந்த சாதனை பலரையும் வியக்க வைத்துள்ளது. சினிமா துறையில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் அஜித் இந்த பயிற்சிக்காக வாங்கிய தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே. அதனையும் ஏழை மக்களின் கல்விக்கு உபயோகப்டுத்துமாறு கல்லூரி நிர்வாகத்திடம் அஜித் கூறியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வழக்கம் போல் கொண்டாடி வருகின்றன.

×Close
×Close