scorecardresearch

ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த விழாவில் பரிமாறப்பட்ட 3 நாட்டின் பாரம்பரிய உணவுகள்!

நிச்சயதார்த்தமே இத்தனை பிரம்மாண்டம் என்றால் திருமணம் குறித்து நினைத்து பாருங்கள்.

ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த விழாவில் பரிமாறப்பட்ட 3 நாட்டின் பாரம்பரிய உணவுகள்!

பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் நடந்து முடிந்த அம்பானி மகனின் நிச்சயதார்த்த விழாவில் 3 நாட்டின் உணவு திருவிழாவே நடத்தப்பட்டது பிரபலங்களையும் வாயடைக்க வைத்துள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 பணக்கார குடும்பம் என்றால் அது அம்பானியின் குடும்பம் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அம்பானியின் மகன் ஆகாஷ் மற்றும் அவரின் செல்ல மகள் இஷாவிற்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. முதலில் ஆகாஷ் அம்பானிக்கு தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது. ஆகாஷ் அம்பானி கரம் பிடிக்க இருப்பது பிரபல வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் இளைய மகளான ஸ்லோகாவை தான்.

ஸ்லேகாவும், ஆகாஷூம் பள்ளி தோழர்கள்.ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகாவிற்கும் ஏற்கனவே காதல் இருந்ததாக கிசுகிசிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்ட திருமணம் நிச்சயமானது.சமீபத்தில் ஆகாஷ் – ஸ்லோகாவின் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.ஒரு திருமண அழைப்பிதழின் விலை 1 லட்சத்திற்கும் மேல் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அழைப்பிதழே இப்படி என்றால் நித்தயார்த்தம் அதையும் தாண்டி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் நடந்து முடிந்துள்ள்து.

மும்பையில் நடைப்பெற்ற இந்த விழாவில் கலந்துக் கொண்ட அனைத்து பிரபலங்களும் திகைத்து நின்றது அம்பானி உணவில் காட்டிய பிரம்மாண்டம் தான். 3 நாட்டின் பாரம்பரிய உணவுகள் இந்த விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிமாறப்பட்டுள்ளது. சாப்பாட்டில் தொடங்கி, சைடிஸ், குக்கீஸ், சாக்லேட், ஐஸ்கிரீம், ஸ்வீட் என சுமார் 500 க்கும் மேற்பட்ட டிஷ்கள் பரிமாறப்பட்டுள்ளன.

இதில் வியக்க வைக்கும் மற்றொரு நிகழ்வு என்னவென்றால் பார்ட்டில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் பலூனில் கட்டி பறந்து வந்துள்ளது. பார்ட்டில் நியமிக்கப்பட்ட வேலையாட்கள் இந்த பலூனை கட்டி இழுத்துக் கொண்டே விருந்தினர்களுக்கு பரிமாறியுள்ளனர். நிகழ்ச்சிகள் கலந்துக் கொண்ட பலரும் இதை வியப்புடன் பார்த்து ரசித்துள்ளனர்.

ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்திற்கு ஆன செலவு மட்டுமே 500 கோடிக்கு மேல் என்ற தகவலும் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றனர்.நிச்சயதார்த்தமே இத்தனை பிரம்மாண்டம் என்றால் திருமணம் குறித்து நினைத்து பாருங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Akash ambani shloka mehta engagement party tonight venue guest list and all you need to know