நீளமான தலைமுடிக்கு 15 வருஷமா இந்த பொடி சாப்பிடுறேன்: சீரியல் நடிகை அக்ஷயா ஹேர் கேர்

தினமும் காலையில் கறிவேப்பிலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, அதன் பிறகு தண்ணீர் குடிப்பேன். எனக்கு தெரிந்து இந்த பழக்கம் கடந்த 15 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதுதான் எனது நீண்ட கூந்தலின் ரகசியம்.

author-image
WebDesk
New Update
Akshaya hair growth

Actress Akshaya

பத்து பன்னிரண்டு வருடங்களாக முடி வெட்டாமல் நீளமாக வளர்த்தேன், அதற்கு என் அம்மா தயாரித்த எண்ணெய் ஒரு காரணம். கேரளாவில் உள்ள எங்கள் வீட்டில் நிறைய தென்னை மரங்கள் இருப்பதால், அங்கு கிடைக்கும் தேங்காயை வைத்தே எண்ணெய் தயாரிப்போம். 

Advertisment

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது முடி வளர்ச்சிக்காக அல்ல, அது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, தலைமுடிக்கு ஒரு கண்டிஷனிங் கொடுக்கத்தான். தலைமுடிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவும், பானங்களும் தான் மிகவும் அவசியம்.

முடி வளர்ச்சிக்கான உணவுப் பழக்கங்கள்

முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை நாம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, சோற்றுக்கற்றாழை ஜூஸ், கறிவேப்பிலை பொடி, மற்றும் வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

Advertisment
Advertisements

சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடிப்பதால் முடி உதிர்வு குறைந்து, தலைமுடிக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.

வெந்தயம் சாப்பிடுவதால் முடி நன்கு கண்டிஷனிங் ஆக இருக்கும்.

fenugreek seeds for cholesterol Dr G Sivaraman tips video Tamil News

தினமும் காலையில் கறிவேப்பிலை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, அதன் பிறகு தண்ணீர் குடிப்பேன். எனக்கு தெரிந்து இந்த பழக்கம் கடந்த 15 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதுதான் எனது நீண்ட கூந்தலின் ரகசியம்.

உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளர, வெளிப்புற பராமரிப்புடன் சேர்த்து, சரியான உணவுப் பழக்கங்களையும் பின்பற்றுவது அவசியம் என்பதை நடிகை அக்ஷயா வலியுறுத்துகிறார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: